அண்மைய செய்திகள்

recent
-

கோகினூர் வைரத்தின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?


உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம், 105 கேரட் எடை கொண்டது.
இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம், பிரித்தானிய அரசர் நான்காம் ஜார்ஜ் காலத்திலிருந்து ( 1937-ம் ஆண்டு முதல்) பிரித்தானிய அரசிகளின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது.
தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மணி மகுடத்தில் கோகினூர் வைரம் உள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு முதல் அவரது கிரீடத்தில் கோகினூர் வைரம் இடம் பெற்றுள்ளது. தற்போது பிரித்தானிய அரசுரிமை பொருளாகவும் இந்த வைரம் உள்ளது.

ஒரு காலத்தில் உலகிலேயே மிகப் பெரிய வைரமாக கோகினூர் கருதப்பட்டது. இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு பல கட்டமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை.
ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொல்லூர் என்ற இடத்தில் கி.பி.13-ம் நுற்றாண்டில் இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. முதலில் காகதிய பேரரசுக்கு சொந்தமாக இருந்தது.

கடைசியாக இந்த வைரம், பஞ்சாப்பை ஆண்ட துலீப் சிங் என்ற மன்னரால், பிரிட்டிஷாரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 1997-ம் ஆண்டு, இந்தியா சுதந்திரமடைந்த பொன் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியா வருகை வந்தார். அந்த சமயத்தில் கோகினூர் வைரம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் ஒப்படைக்கப்படவில்லை.
கோகினூர் வைரம் இங்கிலாந்துக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. அதை கட்டாப்படுத்தியோ, திருடியோ எடுத்து செல்லப்படவில்லை. அந்த வைரம் கொடுக்கப்பட்டபோது, இந்தியா என்ற முழுமையான நாடு உருவாகவில்லை. எனவே இந்த வைரத்தை சட்டப்பூர்வமாக திருப்பி கொடுக்க முடியாது. அதற்கான சட்ட விதிகளும் இல்லை என 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

கோகினூர் வைரத்தின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? Reviewed by Author on June 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.