அண்மைய செய்திகள்

recent
-

கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் பாடசாலைகளுக்கிடையிலான விவாத திறன்காண் போட்டிகள் 2018

விவாத திறன்காண் போட்டிகள் 2018

கறிற்ராஸ் - செடெக் இலங்கை தேசிய நிலையம் உதயமாகிய 50 வது ஆண்டு நிறைவு விழாவினை 2018 ம் ஆண்டு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் முகமாக கறிற்ராஸ் - இலங்கை தேசிய நிலையம் இலங்கையின் அனைத்து மறைமாவட்ட நிலையங்களின் ஊடாக பல்வேறு விதமான போட்டி நிகழ்வுகளை பாடசாலைகளின் மத்தியில் நடாத்தி வருகின்றது. இதன் ஒரு முயற்சியாக மன்னார் மறைமாவட்ட கறிற்ராஸ் வாழ்வுதயத்தினால் பாடசாலைகளுக்கிடையிலான விவாத திறன்காண் போட்டி 02.06.2018 சனிக்கிழமை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியில் நடைபெற்றது. இதில் மன்னார்-மடு வலயங்களைச் சேர்ந்த 13 பாடசாலைகள் மாணவர்கள் இந்த திறன்காண் விவாதப்போட்டியில் மிகவும் துடிப்புடனும் ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டார்கள்.

 இவ்விவாத போட்டிக்கு நடுவர்களாக கல்விசார் அதிகாரிகள் ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை அதிபர்கள்-விவாத அரங்குகளில் பாண்டித்தியம் பெற்ற நல் ஆசான்கள்ää (ஆசிரியர்கள்)  30 ற்கும் மேற்பட்டவர்கள் தம்மை அர்ப்பணம் செய்து இவ்விவாத அரங்கினை சிறப்பாக நடாத்துவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி மாணவர்களை ஒழுங்குபடுத்தி தரமான நடுநிலைத்தன்மையோடு மாணவர்களை தேசிய மட்ட விவாதபோட்டிக்கு தெரிவுசெய்தார்கள்.

 இவ்விவாத போட்டிக்காக  வழங்கப்பட்ட தலைப்புக்கள் பின்வருமாறு
01.மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் கல்வித்தகமை-பால் வேறுபாடு மற்றும் வயதெல்லை கருத்தில் கொள்ளப்படவேண்டும் எனவும் /கூடாது எனவும்
02.  அடிப்படை உரிமைகளுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தவறானது எனவும்/ தவறில்லை எனவும்.
03.மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டியது பொதுமக்களே எனவும்/அரசியல் கட்சிகளே எனவும்.
04.நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் பேண ஊடக சுதந்திரம் உறுதுணையாக அமையும் எனவும்/அமையாது எனவும்.
05.    இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை அவசியம் எனவும்/அவசியமில்லை எனவும். 
5 தலைப்புக்களின் கீழ் விவாததிறன்காண் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 
  • முதலாம் இடத்தினை  மன்/புனித. சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரியும் 
  • இரண்டாம் இடத்தினை மன்/முருங்கன் ம. வித்தியாலயமும் 
  • மூன்றாம் இடத்தினை மன்/தலைமன்னார் துறை G.T.M.S. ம் பெற்றுக்கொண்டது. 
இதன் தேசிய மட்ட போட்டி நிகழ்வுகள் கொழும்பு கறிற்ராஸ்-தேசிய நிலையத்தில் ஆடி மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ளது. 
தேசிய ரீதியாக முதலாம் இடத்தினை பெற்றுக்கொள்ளும் பாடசாலைக்கு ரூபா 100,000.00 மும் 
இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொள்ளும் பாடசாலைக்கு ரூபா 75,000.00 மும்
மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொள்ளும் பாடசாலைக்கு ரூபா 50,000.00 மும் வழங்கப்படுவதோடு-பங்கேற்பாளர்களுக்கான தேசிய மட்ட சான்றிதழும் சிறந்த விவாதிக்குரிய பரிசும் ஞாபகார்த்த சின்னமும்-சான்றிதழும்-அரை இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்படுகிறவர்களுக்கு பதக்கமும்-சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்-

தேசிய நிறுவனத்தில் கலந்துகொள்ளும் அனைத்து பாடசாலைகளுக்கும் ரூபா 15ää000.00 பெறுமதியான புத்தக உறுதிச்சிட்டை என்பனவும் வழங்கி மாணவச்செல்வங்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவ்விவாதப்போட்டிகளை கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் நெறிப்படுத்தி ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில்
    கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் பணிகள் தொடர்பாக விரிவாக எடுத்து கூறினார். அதில் அவர் கூறுகையில் கறிற்ராஸ் தேசிய நிலையமானது இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையினால் 1968 ஆம் ஆண்டு மனிதநேய சமூகப்பணிகளை மையமாக வைத்து சமூக-பொருளாதார-அபிவிருத்தி நடுநிலையமாக
(SEDEC) என்கின்ற பெயரோடு ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தேசிய இயக்குனராக அருட்பணி ஜோபெர்னான்டோ அடிகளார் செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டு கறிற்ராஸ்-இலங்கை தேசிய நிலையம் என்கின்ற பெயரோடு பாராளுமன்றத்தில் 17 வது இலக்க சட்ட கோவையின் கீழ் கத்தோலிக்க ஆயர் பேரவையினால் பதிவு செய்யப்பட்டு  இயங்கி வருகின்றது. அனைத்து மறைமாவட்ட நிலையங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு மறைமாவட்டத்தின் ஆயர்தந்தையர்களை போசகராகவும்-மறைமாவட்ட குருக்களை இயக்குனர்களாகவும் கொண்டு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. கறிற்ராஸ்-வாழ்வுதயம் கடந்த காலங்களில் குறிப்பாக  போர்காலங்களிலும்-போருக்கு பின் மெனிக்பாம் இடம்பெயர் முகாம்களிலும் அடிப்படை நிவாரணப்பணிகளில் இன-மத பேதமின்றி ஈடுபட்டு 2009 இற்கு பிற்பட்ட காலத்தில் மக்களின் மீள் குடியேற்ற காலத்தில் தற்காலிக- நிரந்தர வீட்டுத்திட்டங்களையும்-வாழ்வாதார உதவிகளையும் கிராம புறங்களில் சுத்தமான குடி நீர் பெற்றுக்கொள்வதற்காக  குழாய்கிணறுகள்- திறந்த கிணறுகள் அமைத்து கொடுத்து அரும்பணியாற்றியது எனவும் கூறினார். 

    தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில் தற்பொழுது நிதி மூலங்கள் மட்டுப்படுத்தப்பட்டதன் பின்னணியில் மக்கள் மத்தியில் மென்செயல் திட்டங்களே நடைமுறையில் உள்ளன. குறிப்பாக
  • செயற்கை அவயவங்கள் கை- கால் சார்புறுப்புக்கள் பொருத்தும் பணி-
  • உளவள ஆற்றுப்படுத்தல்-இனமத ஒற்றுமைக்கான உறவுப்பால நிகழ்வுகள்
  • கிராமிய மட்டங்களில் விழிப்பூட்டல் குழுக்களை அமைத்து வாழ்வாதாரம்-சேமிப்பு-குடும்ப முகாமைத்துவம்-கல்விப்பணிகள் என முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக கல்விப்பணிகளுக்காக  ஒவ்வொருமாதமும் பல்கலைக்கழக மாணவர்கொடுப்பனவு-முன்பள்ளி தொண்டர் ஆசிரியர் சம்பள கொடுப்பனவு-ஏழைமாணவர் கல்விக்கொடுப்பனவுவென ரூபா 10 இலட்சம் வழங்கப்பட்டு வருகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு கிராம மட்டங்களில் இரண்டாம்தர தலைமைத்துவ திறன்வளர்ப்பு செயற்பாடுகள் இயற்கை முறையிலான விவசாய வீட்டுத்தோட்ட விழிப்புணர்வுகள்ää வழங்கல் போன்ற பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது எனவும் கூறி தமது உரையினை நிறைவு செய்தார். 
 இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் உரையாற்றுகையில்
 கறிற்ராஸ்-வாழ்வுதயம் மன்னார் மறைமாவட்டத்தில் அரும்பணியாற்றி வருவதையிட்டு பாராட்டி வாழ்த்தினார். அத்தோடு கடந்தகாலத்தில் தேசிய கறிற்ராஸ் அமைப்பானது நாட்டின் சமாதான முன்னெடுப்புக்களுக்கு அரும்பாடுபட்டுள்ளது. மேலும்
மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் எமது நாட்டில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அரும்பாடுபட்டு உழைத்தமையை எமது நாடு நன்கு அறியும். குறிப்பாக நோர்வே நாட்டின் ஆதரவும் அவர்களின் வருகைக்காகவும் அரும்பாடுபட்டு உழைத்ததை நாம் என்றும் மறவோம். கறிற்ராஸ்-வாழ்வுதயம் அன்றுதொட்டு இன்று வரை மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஒரு தொண்டாற்றும் ஸ்தாபனம் எனவும் கூறுயதோடு இப்பணிகளை மிகவும் சிறப்பாக முன்னெடுக்கும் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளாருக்கு எமது ஆயர் சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி தமது உரையினை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வானது காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.30 வரை இடம்பெற்றது.












கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் பாடசாலைகளுக்கிடையிலான விவாத திறன்காண் போட்டிகள் 2018 Reviewed by Author on June 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.