அண்மைய செய்திகள்

recent
-

எலிசபெத் மகாராணியின் 92-வது பிறந்த நாள்: 1000 பேருக்கு சிறப்பு கெளரவ பட்டம்


பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு 1000 பேருக்கு சிறப்பு கெளரவ பட்டம் வழங்கப்பட உள்ளது.
குறித்த பிறந்த நாள் விழாவில் கணவர் இளவரசர் பிலிப் மற்றும் ஏனைய அரச குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் நாட்டின் கலை இலக்கிய சமூக விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்த நபர்களில் 1000 பேரை தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பு கெளரவ பட்டம் வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு கெளரவ பட்டம் பெறும் 1000 பேரின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய கால்பந்து ஜாம்பவான் Kenny Dalglish இன்று Sir பட்டம் பெற உள்ளார்.
அதேபோன்று முன்னாள் லிவர்பூல் மேலாளர் knight பட்டம் பெறுகிறார். மட்டுமின்றி நடிகைகள் Keira Knightley, Emma Thompson உள்ளிட்டவர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் OBE(ORDER OF THE BRITISH EMPIRE) பட்டம் 210 பேர் பெறுகின்றனர். 392 பேர் MBE(Member of the Order of the British Empire) பட்டம் பெறுகின்றனர்.
318 பேர் BEM(British Empire Medal) பட்டம் பெறுகின்றனர். இந்த ஆண்டு கெளரவ பட்டம் பெறுபவர்களில் 71 சதவிகிதம் பேர் ஊடக வெளிச்சம் அதிகம் பெறாத சாதாரண மக்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


எலிசபெத் மகாராணியின் 92-வது பிறந்த நாள்: 1000 பேருக்கு சிறப்பு கெளரவ பட்டம் Reviewed by Author on June 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.