அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர் ஆகணும்: எலும்பு மஜ்ஜை நோயோடு போராடி படிப்பில் சாதிக்கும் சிறுமி -


ஆர்த்தி. எலும்பு மஜ்ஜை நோயினால் உடல் இயக்கம் முழுவதும் பாதிக்கப்பட்டாலும் கல்வியில் சாதித்து வருகிறார்.
இவரது கையெழுத்து மற்றும் படைப்பாற்றல் அனைத்து மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
14 வயதான ஆர்த்திக்கு பிறந்து ஆறு மாதம் முதல் எலும்பு மஜ்ஜை நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் நடப்பதற்கு உக்காருவதற்கே சிரமப்பட்டார்.


இருப்பினும் படிப்பின் மேல் இவருக்கிருந்த ஆர்வத்தால் கோவை குரும்பபாளையம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆசிரியர் சக வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் படிப்பை விடாமல் படித்து வருகிறார்.
தங்களுக்கு ஆர்த்தி ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று அவர் வகுப்பு தோழிகள் ஆர்த்தியை புகழ்கின்றனர். இவ்வளவு உடல் முடியாத நிலையிலும் ஆர்த்தியின் அழகிய கையெழுத்து அனைவராலும் பாராட்டப்படுகிறது.
படிப்பு மட்டுமின்றி பேச்சு போட்டி கட்டுரை போட்டி ஆகியவற்றில் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தனது நோயை மறந்து மற்ற மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து பிறர் உதவியை விரும்பாமல் தன் வேலையை தானே செய்து கொள்ளும் ஆர்த்திக்கு தன்னை நேசித்து அன்பு காட்டும் ஆசிரியர்களை போலவே தானும் ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே விருப்பம்.
அவருடைய விருப்பத்திற்கேற்ப அவரால் முடியும்வரை பள்ளிக்கு அனுப்ப போவதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
தன்னம்பிக்கைக்கான பாடத்திற்கு தன்னையே பொருளாக்கி அனைவருக்கும் ஆசிரியையாகி இருக்கிறாள் இந்த ஆர்த்தி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆசிரியர் ஆகணும்: எலும்பு மஜ்ஜை நோயோடு போராடி படிப்பில் சாதிக்கும் சிறுமி - Reviewed by Author on June 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.