அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கழுதைகளுக்கான மருத்துவமனை மற்றும் கல்விமையம்...படங்கள்


பிறிஜின் லங்காவும் தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து  புதிதாக  நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை  மற்றும் கல்விமையம் 21-06- 2018 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு

பிரதம விருந்தினராக ஓட்தாரா குணவர்த்தன தொழிலதிபர் ஏம்பார்க்நிறுவனர்-விலங்குகள் தின தூதுவர் இவருடன் மருத்துவர் ரமேஸ்-ஒருங்கிணைப்பாளர் The Donkey Sanctuary Animals Aid-UK
மன்னார் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் பிறிஜின் லங்கா அதிகாரிகள் அலுவலகர்கள் தனியார் துறையினர் ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மன்னாரின் வரலாற்றில்  கழுதைகளின் பங்களிகளிப்பினையும் அதன் முக்கியத்தினையும் நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடாக இந்த நிலையம் அமைந்துள்ளது

காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு பராமரித்து பழக்கப்படுத்தி அதனை வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காகவும்
  • மாற்றாற்றல் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை
  • சுற்றுலா நடவடிக்கைகள்
  • மிருகவைத்திய மாணவர்களுக்கான அனுபவக்கல்வி மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளாகவும் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
  •   மன்னாரின் அடையாளமாக இருக்கின்ற கழுதைகள் பாதுகாப்பாக இருப்பதும் பாராமரிக்கப்படுவதும்  வரவேற்கதக்க ஒரு விடையமே…
கழுதைபற்றிய வரலாற்று தகவல்கள் குறிப்புக்கள்

ஈகியூஸ் அசினஸ் (Equus asinus)  எனும் அறிவியல் பெயர்கொண்டு அழைக்கப்படும் காட்டுக்கழுதை இனமானதுஇ குதிரை மற்றும் வரிக்குதிரை குடும்பத்தைச் சார்ந்த தாவர உண்ணியாகும்.

கழுதைகள் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளமிகையொலிகளைப்பயன்படுத்துகின்றன.கழுதை கத்துவதன் மூலம் (டிசயல) 12 கி.மீ அப்பால் உள்ள தனது இனத்தை தொடர்புகொள்ளக்கூடியது. இதற்கு அதன் நீண்ட காதுகளும்இ பலமான தொண்டையமைப்பும்இ சக்திமிக்க நுரையீரலும் உதவுகின்ற

இலங்கையில் காணப்படும் கழுதைகளானது எகிப்து நாட்டைச் சேர்ந்த அட்லஸ்இ ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சோமாலிய கழுதைகள் மற்றும் சிரியா நாட்டைச் சார்ந்த கழுதைகள் இனங்களாக அறியப்படுகிறது. இவற்றுள் மன்னார் பிரதேசத்தில் காணப்படும் கழுதைகள் சோமாலிய கழுதைகள் (Equus Africanus Asinus) வகையைச் சார்ந்தவையாகவும்இ வணிக நோக்கிற்காக கி.பி.8ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த அரேபிய வணிகர்களால் இவை இங்கு கொண்டு வரப்பட்டு வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

.மனிதர்களைச்சார்ந்து வாழும்(symbiotic) தன்மைகொண்ட கழுதைகள் நாய்களை ஒத்த அறிவுக்கூர்மையையும்இ விசுவாசத்தையும் தன் எஜமானர்களிடம் வெளிக்காட்டக்கூடியவை என்பன அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபனமாகியுள்ளன.

உலர்ந்த தாழ் மற்றும் வரண்ட நிலஅமைப்பைக் கொண்ட மன்னார் பிரதேசத்தில் கழுதைகள் அதிகரித்துக் காணப்படுவதற்கு இங்குள்ள பருவகாலமும்இ நிலஅமைப்பும் முக்கியப் பங்காற்றுகின்றன.

முன்னர் கழுதைகள் மிகப்பெரிய சொத்தாக கணிக்கப்பட்டு வந்தன. சீதனம் வழங்கலில் கழுதைகளின் எண்ணிக்கை பிரதானமானதாகவும்இ அதிக கழுதைகளை வைத்திருப்பவர்கள் தனவந்தர்களாகவும் மதிக்கப்பட்டனர்.

இக்கழுதைகள்தான் போர்த்துகேயர்கள் மன்னார் பிரதேசத்தில் சென்.ஜோர்ஜ் கோட்டையைக் கட்டும் போது பெரும் பாறைகளை அனாயசமாக சுமந்து உதவிசெய்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்னம்வண்டுகளையும்(Coconut rhinoceros beetles),ஓலைகளை அழிக்கும் பூச்சியினத்தையும்(coconut caterpillar) கழுதைகள் எழுப்பும் மிகையொலிக்கத்தலானது காண்டாமிருக வண்டுகளை மரங்களின் அருகில் அண்ட விடாமல் துரத்தியுள்ளதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும் இன்றும் நம்பப்படுகிறது.

எகிப்தின் குடும்ப ஆட்சி முறைகளில் கிமு 2565 க்கும் கி.மு 2675 இடைப்பட்ட காலப்பகுதியில் 1000ற்கும் மேற்பட்ட கழுதைகளை உடையவர்களே சமூகத்தில் கனவான்களாக போற்றப்பட்டனர். எகிப்தின் ஆட்சியாளர்களான அரசர் நேமர் இ அரசர் ஹோர் அஹா(King Narmer or King Hor-Aha)அவர்களின் எலும்புக்கூடுகள் 2003 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்டன. அப்புதைகுளியில் 10 கழுதைகளும்இ மனிதர்களுக்கு வழங்கப்படும் அதியுச்ச கெளரவம் வழங்கப்பட்டு அரசனோடு சேர்த்து புதைக்கப்பட்டிருந்தமையானது கழுதைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

கழுதைகளின் பாலில் புரோட்டீன் மற்றும் கொழுப்பு குறைவாகவும் லக்டோஸ் செறிவுள்ளதாகவும் காணப்படுவதால் தாய்பாலை ஒத்த தன்மையைக் கொண்டவையாக அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை தாய்ப்பாலுக்கு இணையாக கழுதை பால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் இவை அழகியல் சாதனங்கள்இ சவர்க்காரம்-தோலின் மென்மையைப் பேணும் களிகளின்  (moisturizers) உற்பத்திகளில் மூலப்பொருளாகவும் உபயோகப்படுத்தப்பட்டன .

விசேடதேவையுடையவர்களை ஆற்றுப்படுத்தும் மருத்துவ முறைகளிலும் (DAT – Donkey Assiated Therapy) கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹிப்போகிரடிஸ் (Hippocrates 460 – 370 BC) கல்லீரல் பிரச்சினைஇ தொற்றுநோய் பாதிப்புகள்இ நீர்க்கோர்வைஇ மூக்கால் இரத்தம் வடிதல்இ விசமுறிவுஇ காய்ச்சல்இ அயர்ச்சிஇ கண்நோய்இ பல்ஈறுப்புண்இ வயிற்றுப்புண்இ ஆஸ்மா மற்றும் காயங்கள் என பல்வேறு நோய்களுக்கும் கழுதைப் பாலை மருந்தாகப் பரிந்துரைத்துள்ளார்.

 இப்போ புரிகின்றதா கழுதையின் மகத்துவம்

 தொகுப்பு-வை-கஜேந்திரன் -






















































மன்னாரில் கழுதைகளுக்கான மருத்துவமனை மற்றும் கல்விமையம்...படங்கள் Reviewed by Author on June 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.