அண்மைய செய்திகள்

recent
-

சாப்பிடும் விஷயத்தில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை பட்டியல்!


சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!

இவை மிகவும் ஆர்வம் மிகுந்தவை மற்றும் ஆச்சரியம் நிறைந்தவை. உலக சாதனைகள் மாயங்கள் கொண்டு, படைப்பாற்றல் தன்மை உடன் திகழ்வதால் தான், கின்னஸ் உலக சாதனைகளை நாம் எப்போதும் கொண்டாடி வருகிறோம். நம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதங்களில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகவும் சுவையான, எச்சில் வழியக் கூடிய வகையில் அரங்கேற்றப்படும் சாதனைகள் உணவு சார்ந்தவை. அவற்றை இங்கே காணலாம்.

2/9
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!

விலை மதிப்பற்ற சாக்லேட் முட்டை
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
இங்கிலாந்து நாட்டில் வில்லியம் கர்லே, அமி ரோஸ் கர்லே, அலைஸ்டர் பிர்ட், சாரா பிராங்லாண்ட், மெலிஸ்ஸா பால், ரியான் மெயாட், சுஸே கர்லே ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு, இந்த சாக்லேட் முட்டை 11,107 டாலர்களுக்கு ஏலம் போனது. 3 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த முட்டை, ’கோல்டன் ஸ்பெக்லெட் எக்’ என்ற பெயரிடப்பட்டது. இது அமெடெய் சாக்லேட், எடிபில் கோல்ட் இலை, கவுசர் சாக்லேட் உள்ளிட்டவற்றை உருவாக்கப்பட்டது.

3/9
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!

உலகின் மிகப்பெரிய பப்புள் காம்
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
24 ஏப்ரல் 2004ல், அமெரிக்காவின் சாட் பெல் 50.8 செ.மீ கொண்ட மிகப்பெரிய பப்புள் காமை ஊதித் தள்ளினார். அலபாமா மாகாணத்தின் வின்ஸ்டன் கவுண்டியில் உள்ள டபுள் ஸ்ப்ரிங்ஸ் உயர்நிலைப் பள்ளியில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ஒரே ஊதலில் மூன்று தனித்தனி பப்புள் காமை உருவாக்கி சாதனை படைத்தார்.

4/9
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!

விலை மதிப்பற்ற விஸ்கி
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
2014ஆம் ஆண்டு, பெரிய கிரிஸ்டல் டிகாண்டரில் நிரப்பப்பட்ட அரிதான மாகல்லன் ‘M' ரக விஸ்கி 628,205 டாலருக்கு விற்கப்பட்டது. 64 ஆண்டுகளைக் கடந்து, தற்போதும் உலகின் மிக விலைமதிப்பற்ற விஸ்கியாக கருதப்படுகிறது.

5/9
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!

அதிவேக ஆரஞ்சு பழம் உரித்து, உண்ணுதல்
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
2016ல் தினேஷ் உபாத்யாயா மற்றும் மணிஷ் உபாத்யாயா ஆகியோரால் மும்பை கோரிகோனில் நிகழ்த்தப்பட்டது. இவர்கள் ஒரு நிமிடம் 7.94 விநாடிகளில் 3 ஆரஞ்சுகளை உரித்து, உண்டு சாதனை படைத்தனர்.

6/9

சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
அதிக ஹாம்பர்கர் உண்ணுதல்
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
2014ல், டகேரு கொபயஷி 3 நிமிடங்களில் 12 ஹாம்பர்களை உண்டு சாதனை படைத்தார். இத்தாலியின் மிலன் நகரில், இந்த சாதனையை நிகழ்த்தினார்.

7/9

சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
மிகப்பெரிய சாக்லேட் காயின்
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
2012ல், 658 கிலோ எடையிலான சாக்லேட் காயினை உருவாக்கினர். இத்தாலியின் போலோக்னாவில் பி.எஃப் செர்விஸி எஸ்.ஆர்.எல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சாதனை படைக்கப்பட்டும், சியோக்கோஷோ கண்காட்சியில் வைக்கப்பட்டது.

8/9

சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
அதிக மிளகாய்களை உண்ணுதல்
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
அமெரிக்காவில் ஜேசன் மெக்நாப் என்பவர், வெறும் 2 நிமிடங்களில் உலகின் மிக காரமான மிளகாயான புட் ஜோலோகியாவை, 66 கிராம்கள் உண்டு சாதித்தார்.

9/9

சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
பிக் மேக் அதிக எண்ணிக்கையில் உண்ணுதல்
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
ஆகஸ்ட் 2016, அமெரிக்காவில் டொனால்ட் கோர்ஸ்கே 28,788வது பிக் மேக்கை உண்டார். இந்த சாதனை அமெரிக்காவின் விஸ்கான்சினில் பாண்ட் டு லாக்கில் நிகழ்த்தப்பட்டது. கோர்ஸ்கேவின் 44 ஆண்டுகால வாழ்க்கையில், 8 நாட்கள் மட்டுமே பிக் மேக்கை உண்ணாமல் இருந்துள்ளார்.
சாப்பிடுவதில் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை!
சாப்பிடும் விஷயத்தில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை பட்டியல்! Reviewed by Author on June 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.