அண்மைய செய்திகள்

recent
-

தெல்லிப்பளையில் நடந்த பதற்றத்தின் பின்னணி என்ன? கொந்தளிக்கும் மக்கள் -


யாழ். தெல்லிப்பளையில் சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஜூட்சன் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தின்போது உயிரிழந்த இளைஞனுக்கும் அங்கு இடம்பெற்ற மோதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அங்கிருப்பவர்கள் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்தில் இருந்த துப்பாக்கி ரவைகளை பொலிஸார் அகற்ற முயற்சித்ததாகவும் அதன் காரணமாக அதனை தாம் கைப்பற்றி வைத்துள்ளதாகவும் தெரிவித்த இளைஞர்கள் குறித்த துப்பாக்கி ரவைகளை நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் திருப்பலி நடந்து கொண்டிருந்த சமயம் ஆயுதங்களுடன் ஒரு சிலர் வருகைத்தந்ததாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தான் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் தன்னை வந்து தாக்கியதாகவும், தனது கையிலும் தலையிலும் வெட்டுக்கள் விழுந்ததாகவும், அதன் பின்னர் பொலிஸார் தன்னை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தினர் எனவும் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன்னை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நிலையில் அதனை தடுப்பதற்காக தனது உறவினர் குறுக்கே மறித்து வந்ததாலேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு பட்டு அவர் உயிரிழந்ததாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் யாரும் விசாரித்தால் நான் தான் சுட்டேன் என தெரிவிக்குமாறு ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாகவும், குறித்த பொலிஸ் அதிகாரியை தன்னால் அடையாளம் காட்ட முடியும் எனவும் அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முழுதும் பொலிஸாரே காரணமென்றும், இதனை ஆவா குழு செய்ததாக பொலிஸார் பரப்புரை செய்வது முற்றிலும் பொய் எனவும் அப்பகுதி மக்கள் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வாள், மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பார்வையிட்ட நீதிபதி சம்பவ இடத்திலுள்ள பொதுமக்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தெல்லிப்பளையில் நடந்த பதற்றத்தின் பின்னணி என்ன? கொந்தளிக்கும் மக்கள் - Reviewed by Author on June 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.