அண்மைய செய்திகள்

recent
-

சிறுநீரக கற்களை கரைக்க இதெல்லாம் சாப்பிடுங்க -


சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது.

சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.
பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிலேயே உண்டாகிறது.
அறிகுறிகள்
  • பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
  • குமட்டல், வாந்தி
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீர் அளவு அதிகரித்தல்
  • சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
  • அடிவயிற்றில் வலி
  • வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
  • இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
  • ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
  • சிறுநீரின் நிறம் இயற்கைக்கு மாறாக காணப்படுதல்
சிறுநீரக கல்லை குறைக்க சாப்பிட வேண்டியவை
  • பிரஞ்சு பீன்ஸ் விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்து விட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்தவும். அதனால் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும்.
  • வாழைத்தண்டு சாறு எடுத்த தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிருநீரக கல் கரைந்துவிடும். வாழைத் தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீருக்கு நல்லது.
  • ரியான முறைப்படி வாழைமரத்தின் கீழ் தோண்டி அதன் வேரை அறுத்து அதின் வழியாக வரும் வாழைச்சாற்றை தினமும் குடித்து வந்தாலே போதும்.
  • துளசி இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிறுநீரகக்கல் உடையும்.
  • இந்த பழத்தின் விதையை பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளு (காணம்) சாருடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும்.
  • இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வறும் வயிற்றில் அருந்தி வரலாம்.
  • தினமும் குறைந்தது 1 லிட்டர் தண்ணீராவது அடிக்கடி குடித்து வந்தால் உடல் கழிவுகள் எளிதாக வெளியேற துணைபுரிவதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளு கொடுக்காமல் அதில் உப்புக்கழிவுகள் கட்டிப்படுவதையும் குறைக்கும்.
  • நீர்த்தன்மை அதிகம் கொண்ட பழங்களான இளநீர், திராட்சை, ஆரஞ்சு, தர்ப்பூசணி அதிகம் உட்கொளளலாம்.

சிறுநீரக கற்களை கரைக்க இதெல்லாம் சாப்பிடுங்க - Reviewed by Author on June 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.