அண்மைய செய்திகள்

recent
-

உலகமே உற்று நோக்கும் சந்திப்பு...சிங்கப்பூர் வந்தனர் டிரம்ப் – கிம் ஜாங் உம்:


இரு எதிரெதிர் துருவங்களாக இருந்த வடகொரிய, அமெரிக்க அதிபர்கள் முதன்முறையாக பகையை மறந்து சந்திக்க இரு நாட்டு அதிபர்களும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

உலக அளவில் வடகொரியாவும் அமெரிக்காவும் இரு எதிரெதிர் துருவங்களாக இருந்து வந்தது. அமெரிக்காவை அழிக்க வடகொரியா அவ்வபோது அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, இரு நாட்டு அதிபர்களும் சமாதன பேச்சுவார்த்தைக்கு தயராகினர். வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்வதாக அறிவித்த ஒரு வாரத்தில், மீண்டும் அதே தேதியில் ஏற்கனவே திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறுமென்று அறிவித்தார்..

 இந்த சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக வட கொரிய அதிபரின் சிறப்பு பிரதிநிதி கிம் யாங் சோல், அன்மையில் அமெரிக்கா சென்றார். டிரம்பை சந்தித்த அவர், கிம் ஜாங் உன் சார்பில் ஒரு கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார். கடந்த 18 ஆண்டுகளில் வடகொரிய தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகை சென்றுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோனை சந்தித்துப் பேசுவது உறுதி என்றும், அப்போது அவரிடம் நிறைய பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது வட கொரியாவின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை உருவாக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்று நடந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இது ஒரு பெரிய தொடக்கமாகும் என நினைக்கிறேன். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். ஜூன் 12 ம் தேதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும். இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், சிங்கப்பூரில் வரும் செவ்வாயன்று அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபரும் சந்திக்கவுள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து 3,000 பத்திரிக்கையாளர்கள் அந்நிகழ்ச்சிக்கு வரவுள்ளனர். இரு எதிரெதிர் துருவங்களாக இருந்த வடகொரிய, அமெரிக்க அதிபர்கள் முதன்முறையாக பகையை மறந்து சந்திக்க இரு நாட்டு அதிபர்களும் தற்போது சிங்கப்பூர் வந்துள்ளனர்.

உலகமே உற்று நோக்கும் சந்திப்பு...சிங்கப்பூர் வந்தனர் டிரம்ப் – கிம் ஜாங் உம்: Reviewed by Author on June 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.