அண்மைய செய்திகள்

recent
-

மடுப்பிரதேச சைவப் பேரவையின் 2 ஆவது ஆண்டு பொதுக்கூட்டமும் அறநெறிக்கல்வி விழிப்புணர்வும்


2018 06.17 ஞாயிற்றுக்கிழமை  இரணை இலுப்பைக்குளம் திருவருள்மிகு பிரகத்சுந்தர குஜாம்பிகா சமேத ஜோதிர்மய மகாலிங்க சுவாமி தேவஸ்தானத்தில் (சிவன் தேவஸ்தானம்) மேற்படி மடுப்பிரதேச சைவப் பேரவையின் 2 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்துடன் மாவட்டச் செயலக கலாச்சார உத்தியோகஸ்தரின் அறிவித்தல் மற்றும் ஆலோசனைகளுக்கமைவாகவும் மடுப்பிரதேச சைவப் பேரவையின் ஏற்ப்பாட்டில் தேசிய இந்துசமய  மாதத்தினை முன்னிட்டு அறநெறி விழிப்புணர்வுப் பேரணியும், மாநாடும் இப்பிரதேசத்தில் மிகவும் சிறப்பாகவும் சமய எழிச்சியுடனும் இடம்பெற்றது


 இந்நிழ்வில் மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த கலாச்சார உத்தியோகஸ்தர்கள், திருக்கேதீச்சரம் திருப்பணிச்சபை இணைச் செயலாளர், அன்னை இல்ல நிதிச் செயலாளர், மன்னார் சிவபூமி இந்து இளைஞர் மன்ற தலைவர் மற்றும் மன்னார் - சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின்  அதிபர் அவர்களும் விசேடமாக கலந்துகொண்டிருந்தனர்.

இவ் விழிப்புணர்வு மானாட்டு பேரணிகளில் நூற்றுக்கணக்கான மடுப்பிரதேச இரணைஇலுப்பைக்குளம் கிராமத்தினை சூழவுள்ள அயல் கிராமங்களின் அறநெறி மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். தொடர்ந்து மடுப்பிரதேச சைவப் பேரவையின் 2 ஆவது ஆண்டு பொதுக்கூட்டமும் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சட்டக்கோவைக்கான அங்கிகாரம் திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேறியுள்ளது.

அடுத்தவாரங்களில் பதிவு நடவடிக்கைகளுக்காக திணைக்களத்திற்கு ஆவணங்கள் அனுப்பிவைக்கப்படவிருக்கின்றது. மடுப்பிரதேச சைவப் பேரவையின் 2 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு மடுப்பிரதேசத்தை சேர்ந்த 16 கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 60 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இடஒழுங்கு மற்றும் அன்னதான ஒழுங்குகளை செய்துதந்த இரணைஇலுப்பைக்குளம் சிவன் தேவஸ்தான திருப்பணிச்சபையினருக்கும் விசேடமாக யோகராசா அண்ணன் அவர்களுக்கும் எமது மடுப்பிரதேச சைவப் பேரவையின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 










மடுப்பிரதேச சைவப் பேரவையின் 2 ஆவது ஆண்டு பொதுக்கூட்டமும் அறநெறிக்கல்வி விழிப்புணர்வும் Reviewed by Author on June 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.