அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தரமற்ற உணவுப்பொருட்கள் அதிகூடிய விலைகளில்- கவலையடையும் மக்கள்

மன்னார் மாவட்டத்தில் உணவுப்பொருட்களின் விலைகளில் கடைகளுக்கு கடையில் மாற்றம் தரமான பொருட்களும் விற்பனைக்கு இல்லை என மக்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

மன்னார் நகரப்பகுதி கிராமப்பகுதிகள் என இரண்டு வகையாக வியாபாரம் நடைபெறுகின்றது. வழமையான விடையம் தான் ஆனால் இரண்டு வியாபாரத்திலும் தரமற்ற பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் விற்பனை செய்துவருகின்றமையானது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

•    தேநீர் சாப்பாட்டுக்கடைகள்(பழைய மற்றும் தரமற்றவை)
•    பழக்-மரக்கறி கடைகள்(அழுகிய மற்றும் நாள்பட்ட மருந்து கலந்த விசிறிய பழங்கள்)
•    பலசரக்கு கடைகள்(விலைகள் மற்றும் காலவதியான திகதி)
•    மருந்துக்கடைகள்(விலைகள் மற்றும்-காலவதியான திகதி தரமற்றவை)
•    இவை நான்கும் பிரதானமானவை(அரசாங்க வைத்திய முறையான பதிவுகள் பெற்றுள்ளதா அதைப்பின்பற்றுகின்றதா…)

 ஏன் என்றால் தினமும் பசிக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் இந்த நான்கு கடைகளும் அவசியம் என்ற வகையில் உடனடியாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
(எல்லோரும் அல்ல சிலர் செய்யும் கேவலமான செயல்கள்….)
ஏனைய கடைகளும் மக்களுக்கான தரமான பொருட்களை விற்கின்றார்களா…என்ற கேள்வியும் நிர்ணயிக்கப்பட்ட விலையிலா விற்கின்றார்களா…. என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் உள்ளது. சாதாரண நூடில்ஸ் பைக்கற்றில் இருந்து பால்மா பைக்கற் வரைக்கும் அதுபோல் சாதரண பனடோல் முதல் சத்திரசிகிச்சைக்கு தேவையான மருந்துகள் வரை எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட விலையிலா விற்கின்றார்கள்.

பாமரமக்களினதும் நாளாந்தக்கூலிகளினதும் நிலையினை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் பணத்தினை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ள விற்பனையாளர்களே….சம்மந்தப்பட்ட அதிகாரிகளே…..

•    விலைகட்டுப்பாட்டு அதிகாரிகளே......
•    சுகாதார பரிதோக அதிகாரிகளே..........
•    வட மகாண சுகாதார அமைச்சரே(முல்லைத்தீவில் சகநோயாளி போலவும் மருந்துக்கடையில் சக கொள்வனவாளர் போலவும் செயற்படும்-பாராட்டுக்கள்-மன்னாரையும் கொஞ்சம் பாருங்கள்)
•    ஏனையவர்களே நீங்களும் தான்…


  மக்களால்   முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது ஆனால் செயற்பாடுகள்.......

உங்கள் பார்வை முழுக்க முழுக்க விழும் இடம் பெட்டிக்கடைகளும் ஏழைகளினதும் பக்கம் தான் மாதத்தில் நீதிமன்றத்தில் நிற்பவர்கள் இவர்கள்தான் பெரிய கடைக்காரர்களும் செல்வாக்கு பெற்றவர்களும்  தப்பித்து விடுகின்றார்கள். நீங்கள் உங்கள் கடமையினை சரியாக செய்கின்றீர்கள் சட்டம் ஏழைகளுக்கு மட்டும்தான் தனது கடமையினை சரியாக செய்யும்(கடந்த காலம் பெரிய கடைகள் பூட்டப்பட்வை இங்கே குறிப்பிடத்தக்கது)
  • பற்றீசில் ஆணி
  • பார்சல் உணவில் பல்லி
  • பருப்புவடையில் மலத்தீன் பவுடர்
  • பாணில் கழிவுப்பொருள்
  • உண்ணும் உணவுகளில்.....தொடர்கின்றது  
தெருவோர  கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் விற்கப்படுகின்ற உணவுப்பொருட்களில் மட்டுமல்ல பெரிய உணவகங்களிலும்தான் அவர்களை வியாபாரம் செய்யாமல் தடுப்பதோ அவர்கள் உழைப்பில் மண்ணள்ளி போடுவதல்ல....சுத்தமான சுகாதாரமான முறையில் வியாபாரம் செய்வதற்கான அனைத்து வசதிகளையும் வாய்ப்புக்களையும்(பதிவுகள்-விழிப்புணர்வு கருத்துக்கள்) ஏற்படுத்தி கொடுங்கள் முதலில்......

வெளியூர் வியாபாரிகளின் வருகை அதிகரித்து இருப்பதாலும் மலிவாக கிடைக்கின்றது என ஏமாற்றம் அடையும் மக்கள்.

அதிகாரிகளையும் அரசியல்தலைவர்களையும் குறைகாண்பது எமது நோக்கமல்ல மக்களினதும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அமைதியான வாழ்வுக்கும் தங்களால் இயன்றளவு சேவையினை செய்ய முயற்சி செய்வீர்களானால் யாவருக்கும் நலனே…

தற்போது எங்கும் எதிலும் கலப்படம் தான் அப்படியிருக்க இப்படி தரமற்ற பொருட்கள் உணவுப்பண்டங்கள் உட்கொள்ளும் மருந்துகள் விலையாகவும் இருக்கும் என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்

விஷத்தினை விலையை கொடுத்தும் வாங்கும் மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள் என்ன பொருள் என்றாலும் விலையினையும் திகதியினையும் தரத்தினையும் நன்கு அறிந்து வாங்குங்கள்.


வாழ்வது கொஞ்சக்காலம் தான் வளமான வாழ்வுக்கு யாவரும் இணைவோம்…..

-மன்னாரான்-

மன்னாரில் தரமற்ற உணவுப்பொருட்கள் அதிகூடிய விலைகளில்- கவலையடையும் மக்கள் Reviewed by Author on June 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.