அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போனகுடும்பமாணவர்களுக்கு கண்டில் எய்ட் லங்காவும் ம.து.ம.சவும் இணைந்து உதவிகள்



“கண்டில் எய்ட் லங்கா”கடந்த 10 வருடங்காளகஅதன் இணைப்பாளர் மூலமாக மன்னார்-வவுனியா-யாழ்ப்பாணம்-முல்லைத்தீவு-அம்பாறை-மட்டக்களப்பு போன்ற இடங்களில் போரினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்டமக்களுக்கு உணவுக்காகவும்-கல்விக்காவும்-சுய வேலைவாய்ப்பு திட்டத்திற்காகவும் உதவிகள் செய்துவருகின்றது.

குறிப்பாக 2013இல் இருந்து“ம.து.ம.ச” மூலமாக 10 பல்கலைக்கழகமாணவர்களக்கும் 4 பாடசாலைமாணவர்களுக்கும்-2014 இல் இருந்து“மார்டப்”
(MARDAP) ஸ்தாபனம் மூலம் 7மனநலம் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்குஉதவிகள் புரிந்துவருகின்றது.

2010இல் இருந்துஅதன் இணைப்பாளர் மூலமாக 12 பல்கலைக்கழகமாணவர்களுக்கும் 6 பாடசாலைமாணவர்களுக்கும்- 5 வறிய குடும்ப உறவினர் உணவிற்கும் மன்னார்- சம்பாந்துறை-கல்முனை-யாழ்ப்பாணம்-முல்லைத்திவு-வவுனியாபோன்ற இடங்களில் உதவிகள் புரிந்துவருகின்றது.

2016ம் ஆண்டில் தேவன்பிட்டி+கத்தாளம்பிட்டிääகள்ளியடிபோன்ற ஊர்களில் உள்ள 30 மீனவகுடும்பங்களுக்கு பங்குத்தந்தை வணபிதா ரஜனிகாந் மூலம் வலைகள்- கரைவலைகள்- கம்புகள் போன்றவற்றிற்க்கு ரூபா. 5 இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கியது.

2016-2017ம் ஆண்டு நத்தார்பரிசாக 22 குடும்பங்களுக்கு 2 ½  இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிவழங்கியது.
காணாமல் போனகுடும்பத்தின் தலைவரை இழந்தபாடசாலைமாணவர்களுக்கு 2016 இல் 25 துவிச்சக்கரவண்டிகளும்- 50 பிள்ளைகளுக்கு சீருடை-சப்பாத்து-பாடசாலைப் பை
(School Bag), பாடஉபகரணங்களைளு.
S.F.C.G, முத்தையாமுரளிதரன் லண்டன் சிறிகுடும்பத்தினருடன் இணைந்துவழங்கியது.மேற்படிவைபவத்திற்கு குருமுதல்வர் வணபிதா விக்ரர்சோசை உதவிபுரிந்தது குறிப்பிட்தக்கது.

இன்று 23-06-2018 ம.து.ம.சதலைவர் வணபிதாஅ.சேவியர் குரூஸ்
தலைமையில்
 11 தகப்பனை இழந்தகாணமல் போனகுடும்பங்களுக்கு  10 துவிச்சக்கரவண்டிகளும் 31 பாடசாலைஉபகரணபொதிகளும் வழங்குவதுடன்  2 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 10ம் ஆண்டுக்கு கீழ் கல்விபயிலும் சிறந்தமாணவர் ஒருவருக்கு மாதாந்தம் கல்வி உதவிகள் பெறமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கண்டில் எய்ட் ஸ்தாபனம் உலகரீதியில் செயல்படும் சமூக ஸ்தாபனம் ஆகும். இது உள்ளூரிலும் வெளியூரிலும் தனிப்பட்டவர்களின் மாதாந்த நிதி உதவி மூலம் இயங்கிவருகின்றது. குறிப்பாக இன்றையதினம் வழங்கப்படும் பாடசாலை உபகரணங்கள் கொழும்பு சர்வதேச பாடசாலைமாணவர்களினால் தமது காலை உணவை தியாகம் செய்து சேகரிக்கப்பட்ட நிதியினால் வழங்கப்படுகின்றது.

இதேபோன்று ம.து.ம.சகடந்த 2008 தொடக்கம் இன்றவரை 271 பல்கலைக்கழகமாணவர்களுக்கும் 107 பாடசாலைமாணவர்களுக்குமாதாந்தஉதவியும்-364 பாடசாலையில் உள்ள வறியமாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கிவருகின்றது.

“ஓர் நலிவுற்றபிள்ளையின் கல்விக்குஉதவுவதன் மூலம் அப்பிள்ளையின் குடும்பத்திற்கு மெழுகுதிரி மூலம் ஒளி ஏற்றுவோம் வாரீர்”
“தானத்தில் சிறந்ததுகல்வித் தானம்”


இன்றைய உதவிபெற்றவர்கள் கொழும்பில் இருந்து கண்டில் எய்ட் மூலமாக கடிததொடர்பு கொள்ளப்படும் பட்சத்தில் மன்னார் இணைப்பாளரை தொடர்புகொண்டுதகவல் தரவும்.
1.    4 மாத நிறைவில் பணம் பெற்றதாககடிதம்
2.    ஒருவருடத்தில் உங்கள் முன்னேற்றஅறிக்கை
3.    உங்களுக்குநிதிவழங்கும் நபரக்குநன்றிக் கடிதம் போன்றவற்றை ஆங்கிலத்தில் எழுதி இணைப்பானருக்கு அனுப்பிவைக்கவும்.


தகவல்- திரு. சின்கிலேயர்பீற்றர்
இணைப்பாளர்
கண்டில் எய்ட்
மன்னார். (0772131652)

























காணாமல் போனகுடும்பமாணவர்களுக்கு கண்டில் எய்ட் லங்காவும் ம.து.ம.சவும் இணைந்து உதவிகள் Reviewed by Author on June 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.