அண்மைய செய்திகள்

recent
-

எங்களுடைய சிறுவர்களை ஒன்றிணைந்து பாதுகாப்போம்! மைத்திரி அழைப்பு -


எங்களுடைய சிறுவர்களை நாங்கள் ஒன்றிணைந்து பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனா கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களைப் பாதுகாப்போம் என்ற இந்த விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன,
நாங்கள் சிறுவர்கள் என்று சொல்வது யாரை? இங்கே நானும் மாகாண முதலமைச்சர் அவர்களும் ஏனைய அதிகாரிகளையும் கூட எங்களது தாய் தந்தையர் எங்களையும் பிள்ளைகள், மகனே என்று தான் அழைப்பார்கள், அப்படிப்பார்க்கப் போனால் நாங்கள் எல்லோருமே பிள்ளைகள் தான்.
ஆனால்; சிறுவர்களைப் பாதுகாப்போம் என்ற இந்ததேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 17 வயதிற்குட்பட்ட அனைத்துப் பிள்ளைகளையும் இந்த செயல் திட்டத்தில் சேர்த்துக்கொள்வது தான் முக்கியநோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை உலக சிறுவர் தினமாக குறிப்பிட்ட ஒரு நாளை உலகத்தில் கூறி சிறப்பாக பிரகடணப்படு த்திருயிருக்கின்றார்கள்.

இந்த உலக சிறுவர் தினத்தில் உலக நாடுகளிலும் இருக்கக்கூடிய அனைத்து சிறுவர்களையும் உள்ளடக்கி இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றது.
நாம் இந்த வேலைத்திட்டத்தினை ஏன் ஆரம்பித்தோம், அதற்கான நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டியுள்ளது? இன்று சிறுவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அது இந்த நாட்டில் மாத்திரம் அல்ல, உலகத்தில் எல்லாநாடுகளிலும் அப்படித்தான், ஆனால் பொருளாதார முன்னேற்றம் அடையாத அபிவிருத்தி அடையாத ஏழ்மையான நாடுகளில் இந்தப்பிரச்சனை மென்மேலும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
யுத்தம் நடந்த நாடுகளிலும் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் கூட இந்தப்பிரச்சனைகள் மென்மேலும் அதிகமாகக் காணப்படுகின்றன.
பிள்ளைகளுக்கு பல்வேறு கஸ்ரங்கள் துன்புறுத்தல்கள் எல்லாமேற்படுகின்ற முதலாவது இடம் தான் பெற்றோர்கள், ஆனால் எல்லாப் பெற்றோர்களும் அப்படியல்ல.

பெற்றோர்களிடம் இருக்கின்ற பொறுப்பற்ற தன்மை, கல்வியறிவு இன்மை, அதேபோல போதைப்பொருள் அதிகளவில் பாவிக்கின்ற தன்மை, இவை தான் இவற்றுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
எனவே பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இடமாக அவர்களது வீடுகளை மாற்றியமைக்கவேண்டும், அதனையே நாங்கள் செய்யவேண்டும், நாங்கள் பெற்றோர்கள் பற்றிப்பேசுகின்ற அதேவேளை நாங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புகின்றோம், அங்கேயும் பாதுகாப்புத்தன்மை பற்றி கேள்விகள் இருக்கின்றன.

சில குடும்பங்களில் பெற்றார்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச்செல்கின்றார்கள், அந்தச்சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் தனித்து இருக்கின்றன. அதனால் அந்தபபிள்ளைகள் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். அதனால் தான் இன்று அனைவரையும் ஒன்றிணைத்து இச்செயற்திட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம்.
பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன. முகாம்கள் இருக்கின்றன. ஆனாலும், அந்த இடங்களிலும் கூட பிள்ளைகளுக்கு சில துன்பங்கள் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன.

பிள்ளைகள் எல்லோரையும் நாங்கள் பாதுகாப்பதற்கு நாங்கள் எல்லோரும் ஆண்டவர்களாக மாறவேண்டும். உலகத்தில் எல்லா நாடுகளிலும் சிறுவர்கள் பிரச்சனை காணப்படுகின்றது. எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துத்தான் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய சிறுவர்களை நாம் ஒன்று சேர்ந்து பாதுகாப்போம், அவர்களை நல்வழிக்கு கொண்டு வருவோம் என்ற அந்த வேண்டுதலை நான் உங்கள் முன் வைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய சிறுவர்களை ஒன்றிணைந்து பாதுகாப்போம்! மைத்திரி அழைப்பு - Reviewed by Author on June 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.