அண்மைய செய்திகள்

recent
-

படிப்பு வராது என்று நினைக்கும் குழந்தைகளை எப்படி படிக்க வைக்கலாம் -


படிக்கவே மாட்டேன் என்று ஆடம் பிடிக்கும் குழந்தைகளையும் எனக்கு படிப்பு வராது என்று தீர்மானமாக முடிவெடுத்து பள்ளிக்கு போகாமல் இருக்கும் குழந்தைகளுக்கும் எளிதான முறையில் படிப்பை போதிக்க முடியும்.
கல்வி என்பது நம் குழந்தைகளுக்கு நாம் செய்ய கூடிய கடமைகளில் ஒன்று. கல்வியின்றி ஒரு குழந்தையின் அறிவு முழுமையடையாது.கல்வி என்பது எதற்கெனில் மூளையின் வேலைப்பாடுகளை அதிகரிக்க செய்யும் பயிற்சிகளே ஆகும்.

படிக்க திணறும் மாணவர்களும் பாடத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும் வகையில் படிக்க செய்வதற்கு Receiprocal Learning முறை உதவி செய்கிறது. பாடங்களை சுவாரஸ்யமாக சொல்லி கொடுக்கும் முறையே இந்த ரெஸிபிரோக்கல் லியர்னிங் முறை.

கவனம் சிதறும் குழந்தைகளுக்கு இந்த முறை பாடத்தில் கவனம் பதிய வைத்து பாடத்தை உள்வாங்கி கொள்ள உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் எனக்கு பாடம் படிப்பதே பிடிக்கவில்லை என்று புலம்பும் மாணவர்களை எப்போது மீண்டும் படிக்கும் நேரம் வரும் என்று எங்க வைக்கிறது.
இந்த ரெஸிபிரோக்கல் லியர்னிங் முறையை ஆசிரியர் ஒருவரும் உளவியலாளர் ஒருவரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.அவர்களது பெயர்கள் முறையே பாலின்க்ஸ்சர் மற்றும் ஆன் பிரவுன் ஆகும்.
1984 களுக்கு பின்னால் ஆன ஆராய்ச்சியின் முடிவில் இவர்கள் இந்த வழியினைக் கண்டுபிடித்தனர். பேசுவது என்பது அனைவருக்கும் பிடித்தமான விடயம். பேசிக்கொண்டே விவாதித்துக் கொண்டே படிப்பதுதான் இந்த ரெஸிபிரோக்கல் லியர்னிங் முறை.

மாணவர்களும் ஆசிரியரும் குழுவாக அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு பாடத்தை எடுத்து அதன் தொடர்புகளை மற்றொரு மாணவர் கூற வேண்டும், அதன் பின் அப்பாடத்தின் பற்றிய விளக்கங்கள் வேறொரு மாணவரால் விளக்க படும். பின் கேள்வி கேட்க ஒரு மாணவர் பங்கேற்க வேண்டும். பல்வேறு கேள்விகள் கேட்பதன் மூலம் பாடத்தை அக்கு வேறு ஆணி வேறாக புரிந்து கொள்ள முடியும். அதன் பின் வேறொரு மாணவர் கற்றுக் கொண்ட பாடத்தை தான் அறிந்து கொண்ட வகையில் மற்றவருக்கு சுருக்கமாக கூறுவார்.
ஒவ்வொரு குழுவிலும் நான்கு மாணவர்களும் ஒரு ஆசிரியரும் இருப்பது அவசியம்.

எப்போதும் ஒரே மாணவர்தான் குறிப்பிட்ட பங்கை ஆற்ற வேண்டும் என்பதில்லை. மாறி மாறி செய்வதால் தயக்கங்கள் மற்றும் அச்சம் விலகி மாணவர்கள் அனைவரும் சமமாக படிக்க முடியும்.
இந்த முறையில் புரிந்து கொள்ளுதல்தான் முதல் விதி. இது ஒரு போட்டி போல எடுத்து கொண்டு செய்ய கூடாது. சக மாணவனுக்கு புரியும் வரை காத்திருக்க வேண்டும். அல்லது புரியவைக்க முயல வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் விட்டு கொடுக்கும் தன்மை மற்றும் அரவணைக்கும் தன்மை வளரும்.

பாடத்தை வீட்டில் படித்து விட்டு வந்து அடுத்த நாள் இந்த முறையை பயன்படுத்தலாம். மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனிற்கேற்ப பாடத்தின் முறையை ஆசிரியர்கள் மாற்றலாம். மேலும் ஒரே குழுவை பயன்படுத்தாமல் ஒவ்வொரு படத்திற்கும் குழுக்களை மாற்றியமைக்க வேண்டும். ஆகவே அவர்கள் அனைவரும் சமமான முறையில் அறிவை வளர்த்தி கொள்ள முடியும்.

சிறு சிறு அடம்பிடிக்கும் குழந்தைகளை பெற்றவர்கள் இதே முறையை பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள நபர்களின் உதவியோடு குழந்தையை சந்தோஷமாக படிக்க வைக்க முடியும்.
அதற்கு ரெஸிபிரோக்கல் லியர்னிங் முறை பெரிதளவில் உதவுகிறது.

படிப்பு வராது என்று நினைக்கும் குழந்தைகளை எப்படி படிக்க வைக்கலாம் - Reviewed by Author on June 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.