அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பிரதான வீதிகளில் இடைஞ்சலாக இருக்கும் மரங்கள்-பலமான காற்று வீசுகின்றபோது….



மன்னாரில் பிரதான வீதிகளில் இடைஞ்சலாக இருக்கும் மரங்கள் பிரதான வீதியின் இருபக்கமும் நன்கு வளர்ந்த மரங்களின் கிளைகள் கொப்புகள் தென்னை ஓலைகள்  பிரதான வீதிக்கு நீண்டு வளர்ந்து இருப்பதால் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான வாகனஓட்டுனர்கள் பாதிப்பும் விபத்துக்களும் அதிகமாக ஏற்படுகின்றது…

  • வீதிகளில் பள்ளம்
  • நீண்டு வளர்ந்து இருக்கும் கிளைகள் கொப்புகள் தென்னை ஓலைகள் என்பன முறிந்து விழுதலும்
  • தென்னை மரங்களில் இருந்து தேங்காய் குரும்பை பாலைகள் போன்றன மக்களின் மேல் விழுதல்.
  • மின்விளக்குகள் ஒளிராமை.
  • மின்கம்பங்கள் வயர்கள் மீது விழுவதால் மின்விபத்துக்கள் ஏற்படுகின்றது.
  •  அறுந்து தொங்கும் மின்னினைப்பு வயர்கள்(கேபிள்-ரெலிகொம் வயர்கள்)
  • மரங்களில் குடியிருக்கும் பறவைகளின் எச்சம் மற்றும் கூடுகள் அதில் இருந்து விழும் முள் பழையகம்பிகள் என்பன பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
வீதியின் இரண்டுபகுதிகளிளும் வளைவுகளில் மரங்கள் நிற்பதால் வீதி தெரியாமல் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
பிரதான வீதிகளிலும் பார்க்க உள்ளக வீதிகளில் தென்னை ஓலைகளின் பிரச்சினை அதிகமாகவுள்ளது உரிய வீட்டுக்கரர் கவனமின்மையாக இருத்தல்.
இது ஒரு சிறுபிரச்சினையாக இருந்தாலும் பெரிய விளைவுகளை கொண்டுவரக்குடியதாகவுள்ளது.

ஏல்லாத்திற்கும்  பிரதேச சபையும் நகரசபையும் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை முதலில் எமது வளவுகளில் இருந்து வெளியால் வீதிப்போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் தென்னை ஓலைகள் மற்றும் மரக்கிளைகளை வெட்டிஅகற்றுவோம் அதன் பின்பு முடிந்தால் பிரதான வீதிகளில் இருக்கும் போக்குவரத்துக்கு இடைஞ்சலான மரங்களையும் கிளைகளையும் வெட்டிஅகற்ற இணையவேண்டும்.

தற்போது பலமான காற்று வீசுகின்றது இதனால் மரங்களில் பட்டுப்போயுள்ள கிளைகள் கொப்புகள் பழுத்த ஓலைகள் தேங்காய்கள் விழுகின்றன அவதானமாக இருங்கள் அத்தோடு உயரமாகவுள்ள விளம்பரப்பலகைகள் முறிந்தும்  சரிந்தும் விழுகின்றது.
அத்தோடு காற்றில் அள்ளுப்பட்டு வரும் புழுதிமணலினாலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.

  • குப்பைகள்கொளுத்தும்போதும் அவதானமாக இருங்கள்.
  • குறிப்பாக கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களும் கடற்றொழிலுக்கு செல்வோரும் அவதானமாய் இருங்கள்.

எவ்வாறு நாம் அவதானமாக இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்கின்றோமோ அதேபோல் பிறறின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவோம்.

 சம்மந்தப்பட்ட அதிகாரிகளும்  கொஞ்சம்.......

யாவரும் நலமாய் வாழ முதலில் நாம் முன்வருவோம்…..

-வை.கஜேந்திரன்-
 


மன்னாரில் பிரதான வீதிகளில் இடைஞ்சலாக இருக்கும் மரங்கள்-பலமான காற்று வீசுகின்றபோது…. Reviewed by Author on June 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.