அண்மைய செய்திகள்

recent
-

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பிரித்தானிய மகாராணி - டிரம்ப் சந்திப்பு....

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த எலிசபெத் மகாராணி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு ஜூலை மாதம் 13 ஆம் திகதி நடைபெற உள்ளதாக பிரித்தானியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவியேற்றது முதற்கொண்டே அவர் எப்போது பிரித்தானிய மகாராணியை சந்திப்பார் என்னும் எதிர்பார்ப்பு உலகம் முழுவதிலுமே காணப்பட்டது.

ஏற்கனவே பிப்ரவரி மாதம் லண்டனில் அமெரிக்க தூதரகத்தை திறந்து வைப்பதற்காக டிரம்ப் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவர் பிரித்தானியா மகாராணியை சந்திப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதர் Robert Wood Johnson தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் தற்போதைய பிரித்தானிய பயணம் அதிகாரப்பூர்வமான பயணம் என்று அல்லாமல் அலுவல் தொடர்பான பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த Robert Wood அமெரிக்க அதிபரின் பிரித்தானிய பயணத்தின் முழு விவரங்களும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் அதில் மாகாரணியை சந்திக்கும் திட்டம் நிச்சயம் உண்டு என்றார்.
மகாராணி நாட்டின் தலைவர், அதனால் நாட்டுக்குள் வருபவர் முதலில் நாட்டின் தலைவரை சந்திக்க வேண்டும், அதனால் அமெரிக்க அதிபர் நிச்சயம் மகாராணியைச் சந்திப்பார் என்றார் அவர்.

மகாராணியை சந்திப்பதுதான் மிகவும் முக்கியமான விடயம், அதைச் செய்யத்தான் அதிபர் டிரம்பும் விரும்புவார் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பிரித்தானிய மகாராணி - டிரம்ப் சந்திப்பு.... Reviewed by Author on June 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.