அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலை பகுதியில் மீண்டும் களவாடப்படும் இயற்கை வளம்-கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்.

மன்னாரில் இயற்கை வளங்கள் வியாபாரநோக்கத்திற்காகவும்  திட்டமிட்டு அழிக்கப்படுவதையும் சூறையாடப்படுவதையும் கண்டும்காணாமல் இருக்கும் அதிகாரிகளும்-மக்களும்-துடிப்புமிகு இளைஞர்களும்......
    இங்கே மீண்டும்...........................................



மன்னார் மாவட்ட வங்காலை எல்லைப்பிரதேசத்தினுள் அடங்கும் வங்காலை வீதியிலுள்ள வனப்பிரதேசமான “கற்றாளம் பிட்டி” என அழைக்கப்படும் பிரதேசத்தினுள் காணப்படும் இயற்கை வளமான கற்றாளை தாவரங்களானது கடந்த சில நாட்களாக வியாபார நோக்கத்திற்காக சில நபர்களால் களவாடப்பட்டு ஏற்றுமதியாகி வருகின்றது.

 இது பல மருத்துவ குணத்தையும் நன்மைகளையும் கொண்டது. இதன் மூலம் பல விலையுயர்ந்த பாவனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதனால்  மண்ணிண் வளங்களை வியாபார நோக்கத்திற்காக சூரையாடப்பட்டு வெளிநாடுகளிற்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

 அண்மையில் சில  ஆண்களும் அவர்களுக்கு துணையாக பெண்ணொருவரும் இவ்வாறு களவாடியபோது வங்காலை பிரதேச மக்களினால் அவதானிக்கப்பட்டு கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு சரியான முறையில் தண்டணை வழங்கப்பட்டதாக தெரியவில்லை.

 எனவே பொது மக்களாகிய நாம் இவ்வாறு அருகி வரும் வளங்களை அழிந்திடாமல் பாதுகாத்து எம் வருங்கால சந்ததியினருக்கு பயன்பெற காத்திடவேண்டும். எனவே இவ்வாறான தவறுகள் மென்மேலும் இடம் பெறாதவாறு விழிப்பாயிருந்து எம் வளங்களை பாதுகாப்போம்.

இது தொடர்பான விடயங்களை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பொது மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் என் கிராம விருத்தி ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.




மன்னார் வங்காலை பகுதியில் மீண்டும் களவாடப்படும் இயற்கை வளம்-கண்டுக்கொள்ளாத அதிகாரிகள். Reviewed by Author on June 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.