அண்மைய செய்திகள்

recent
-

மறைந்த பின்னர் பிரித்தானிய அறிவியலாளருக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் -


மறைந்த பிரித்தானிய அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல், தற்போது விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் பிரித்தானியாவில் பிறந்தவர் ஆவார். இவரது கோட்பாடுகளான Big Bank Theory, Black Hole ஆகியவை தற்போது ஆராச்சி செய்யப்பட்டு வருகிறது.

விண்வெளி குறித்து பல ஆராய்ச்சிகளை செய்த ஹாக்கிங், கடந்த மார்ச் மாதம் மரணமடைந்தார். இந்நிலையில், இவரது குரலை வாங்கிளிஸ் என்ற கிரீக்கைச் சேர்ந்த இசையமைப்பாளர் பாடலாக மாற்றியுள்ளார்.
அந்த பாடலில் ஹாக்கிங் பேசும் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 6.30 நிமிடங்கள் கொண்ட இந்த பாடல், உலக அமைதியை முன்னெடுக்கும் விதத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் இந்த பாடலை விண்வெளியில், 3500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கருந்துளை ஒன்றிற்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த கருந்துளையின் வடிவமைப்பு காரணமாக, அப்பகுதியில் அவரது குரல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அனுப்புவதற்காக ஸ்பெயினில் பெரிய ஒளி அனுப்பும் கருவி ஒன்றை விஞ்ஞானிகள் அமைத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் இந்த பாடல் அனுப்பப்பட உள்ளது. அதே நாளில் இந்த பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதுவரை உலகில் இந்த அளவுக்கு யாருக்கும் பெரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது.



மறைந்த பின்னர் பிரித்தானிய அறிவியலாளருக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் - Reviewed by Author on June 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.