அண்மைய செய்திகள்

recent
-

1976ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் தூக்கு தண்டனைக்கு அனுமதி -


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1976ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி கடைசியாக ஒருவருக்கு மரண தண்டனையாக தூக்கில் போட்டது. அன்று முதல் கடந்த 42 வருடங்களாக தூக்குத் தண்டனை நாட்டில் அமுலில் இருக்க வில்லை.
இந்நிலையில், 42 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக இடம்பெற்றுள்ள கொலைகள் மற்றும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்தபடியே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது என்பது அதிகரித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகவும், அமைச்சர்கள் இதனை வரவேற்றுள்ளதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

இந்நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நீதியமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

1976ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் தூக்கு தண்டனைக்கு அனுமதி - Reviewed by Author on July 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.