அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களின் கல்வியோடு விளையாடும் மன்னார் மின்சார சபை.............தீர்வு,,,???


மன்னார் மாவட்டத்தில் தொடர் கதையாகி வரும்  மின் தடை மாணவமாணவிகள் பாதிப்பு கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்

மன்னார் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சினைகளில் பாரிய பிரச்சினையாகவுள்ளது  மின்சாரத்தடை  இப்பிரச்சினையானது.  எல்லோருக்கும்  பொதுவான பிரச்சினையாக இருந்தாலும் மாணவமானவிகளின் கல்வியோடும் எதிர்காலத்தோடும் விளையாடுகின்றது. மின்சார சபை....

வருகின்ற மாதம் 06-08-2018 உயர் தரப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளது அதைத்தொடர்ந்து புலமைப்பரீட்சையும் நடைபெறவுள்ள நிலையிலேயே.....

எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது
சும்மா விளையாட்டாக  மாணவர்கள் பரீட்ச்சை காலங்களில் மட்டுமேன் இந்த  நிலைமை தொடருமானால் மாணவர்களின் கல்விபாதிக்கப்படுவதோடு பரீட்சை முடிவுகள் பாரிய பின்னடைவை தரும் இதனால் மாணவர்கள் மனவுளைச்சளுக்குள்ளாகின்றனர்.
ஓவ்வொரு முறையும் குறிப்பாக பரீட்சை காலங்களில் தான் இந்த சூழ்நிலை ஏற்படுகின்றது
  • 05புலைமைப்பரீட்சை
  • O/L-சாதாரண தரம்
  • A/L-உயர் தரம்
அதற்கான தீர்வினை இன்னும் முன்வைக்காமல் தானும் தன்ரபாடுமாய் இருக்கும் மன்னார் மின்சாரசபை ஏன் இந்த மந்த நிலைமை இதற்கான நல்ல தீர்வில்லையேல் பரீட்சை எழுதுவதை விட்டு வீதியில் இறங்கி போராடும் நிலையில் உள்ளனர் மாணவமாணவிகள்
31-06-2018 மாதமும் குறிப்பாக பொதுவிளையாட்டரங்கில் களியாட்ட நிகழ்வுக்கு மக்களை அழைப்பதற்காக மின்சாரத்தினை நிறுத்தி வைத்ததும் இதுபோன்ற பல  நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றது.

இந்த மாதம் மட்டும் 07-08-07-2018 14-15-07-2018 தொடர்ச்சியாக காலை 9-00 முதல் மாலை 5-30வரை என்றாலும் அதையும் தாண்டி 7-30 8மணிக்கும் பின்பும் தான் மின்சாரம் வருகின்றது.

  • மின்கம்பங்கள் திருத்த வேலை
  • மின்மாற்றிகள் திருத்த வேலை
  • மின்னினைப்புகள் கழுவுதல் என ஒவ்வொரு முறையும் மின்தடை ஏற்படுத்தப்படுகின்றது.
இவ்வாறான திருத்த வேலைகள் நிறைவுற்றாலும் இடைக்கிடை 30நிமிடம் 1மணித்தியாலம் மின்தடைவேறு இதற்கான முழுமையான காரணம் என்ன
உண்மை நிலை என்ன…….
மின்சாரம் தடைப்பட்டதும் நடப்பது----
  • மாணவர்களின் கற்றல் பாதிப்பு
  • களவுகள் அதிகரிப்பு
  • குற்ற செயல்கள் அதிகரிப்பு
  • தொழில் முயற்சிகள் பாதிப்பு
  • அன்றாடக்கூலி வேலையிழப்பு
  • சனி-ஞாயிறு விடுமுறையில் மகிழ்ச்சியான தருணம் இழப்பு-இதை எப்போதாவது சிந்திக்கின்றதா மின்சார சபை மன்னார் கிளையும் ஏனைய கிளைகளும்

ஏற்கனவே மன்னார் மின்சாரக்கிளையினால் அறவிடப்படுகின்ற மின்பட்டியல் விலை அதிகம் என கொந்தளித்துப்போய் இருக்கும் மக்கள்.
அதுபோல் மின்கசிவுகள் மின்னொழுக்கு மின்தடை என்பனவற்றினை அறிவிக்கவும் தகவல் பெறவும் அழைத்தால் யாழ்ப்பாணத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துங்கள் என்கின்றனர் மன்னார் மின்சார சபை கிளையினர் அப்படியாயின் மன்னாரில் ஏன்...?
 மின்சார சபைக்கிளைக்காரியாலயம.;
முழுமையாக வழங்கப்படாத மின்சாரத்திற்கான மின்பாவனைக்காக பட்டியலை அறவிடுவதற்கான மையமா……..????

மேற்குறித்த விடையங்களுக்கான நல்ல தீர்வினை மிகவிரைவாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வைக்கவேண்டும். அத்துடன் பிரதேச நகர சபை உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள் கண்களை மூடிக்கொண்டிராமல் விரைந்து செயற்படுங்கள்….

காலம் தாழ்த்த வேண்டாம் கடமையினை செய்யுங்கள் விரைவாக…..இல்லையேல் கல்லுரி மாணவமாணவிகள் வீதிகளில் இறங்கி போராடும் நிலையை யாராலும் ……………..
-மன்னார்விழி-

மாணவர்களின் கல்வியோடு விளையாடும் மன்னார் மின்சார சபை.............தீர்வு,,,??? Reviewed by Author on July 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.