அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்களுக்கோர் அறிவித்தல்….


மன்னார் மக்களுக்கோர் அறிவித்தல்….
மன்னார் மாவட்டத்தில் களவுகளும் வழிப்பறியும் சங்கிலி அறுப்பும் அதிகரித்துள்ளது.

மன்னார் நகரப்பகுதியிலும் கிராமப்புறத்திலும் களவும் வழிப்பறியும் சங்கிலி அறுப்பும் சரிக்கு சரி அதிகரித்துள்ளதானது
திருவிழாக்கள்-களியாட்ட நிகழ்வுகளில் நடந்த திருட்டு சம்வங்கள் தற்போது இயல்பாக எல்லா இடத்திலும் நடைபெற்றவண்ணம் உள்ளது
  • கடைகள் உடைப்பு
  •  வீடுகள்  உடைப்பு
  • சங்கிலி அறுப்பு
  • வீடு உடைத்து திருட்டு
  • துவிச்சக்கர வண்டிகள்
  • மோட்டார் வண்டிகள்
  • வீட்டில் வளர்க்கும் பிராணிகள்(கோழி-ஆடு-மாடு-கிளி-புறா) போன்றவையும்-சிலகுடும்பங்களின் வாழ்வாதரமும் பாதிப்பு
  • விலையுலர்ந்த பொருட்கள்
  • கல்-மண்-இதரப்பொருட்கள் என எதுவானாலும் திருடப்படுகின்றது
கடந்த மாதம் மட்டும் 5 கடைகள் உடைத்து சுமார் 75000-200000 வரையான பொருட்கள் பணம் திருடப்பட்டுள்ளது அதுவும் மக்கள் புழக்கம் உள்ள பிரதான வீதிகளில் உள்ள கடைகளில் தான்.

அதுவும் நூதனமான முறையில் கடைகள் உடைப்பதில்லை ஒற்றைக்கதவினை மட்டும் திறந்து போகின்றார்கள் பூட்டுக்கள் யாவும் காணாமல் போகின்றது அதே நேரம் சத்தமின்றி உடைக்கப்படுகின்ற பூட்டுக்கள்(உடைக்கப்படுவதில்லை ஹாஸ் கொண்டு வெட்டி எடுக்கின்றார்கள் பூட்டுக்கள் யாவும் கொண்டு சென்று விடுகின்றார்கள்)
இது எவ்வாறு சாத்தியமாகும் இரவகளில் ரோந்துப்பணியில் பொலிசார் கடமையில் இருக்கின்றார்கள் அத்தோடு பிரதானமாக இரவுநேரக்காவலர்கள் இருக்கின்றார்கள் அப்படி இருந்தும் எவ்வாறு இந்த களவுகள் நடைபெறுகின்றது என்றால் எழுவது பெரும் கேள்விதான்……..?????

மன்னார் மாவட்டத்திற்குள் மோட்டார் சைக்கிள் திருடும் இனம்தெரியாத குழு ஒன்று இறங்கியுள்ளதாக தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது
மோட்டார் பைக்கினை திருடி அதன் உதிரிப்பாகங்களை வேறுமாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர் ஆகவே மக்களாகிய நீங்கள் உங்களது உடமைகளையும் பொருட்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

மோட்டார்பைக்கினை கான்லொக் போடலாம் அல்லது உங்களது கண்பார்வையில் வைத்திருங்கள்  உங்களுக்கு தெரிந்தமுறையில் உங்களது உடைமைகளை காத்துக்கொள்ளுங்கள்.
அதுபோல அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டில் பணிநிமித்தம் வெளியில் செல்வதால் காலை 8-00 மாலை 4.30 வரையுமான நேரத்திற்குள் பகலில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மூர்வீதிப்பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த திருடர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று எல்லாவற்றினையும் அள்ளிக்கொட்டி அவர்கள் எதிர்பார்ததது கிடைக்காததால் சிலபொருட்களை உடைத்துவிட்டுச்சென்றுள்ளனர்.

களவுகள் ஏற்படக்காரணம்
  • தற்போதைய விலையேற்றம்-நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் காரணமாக இருக்கலாம்.
  • வேலையில்லாத்திண்டாட்டம்-வியாபாரம் செய்யும் அதிகமான வெளிமாவட்ட வியாபாரிகள்
  • மின்சாரம் அடிக்கடி துண்டிப்பு
  • சோம்பேறிகளின் உருவாக்கம் அதிகம்
  • வேறுமாவட்டங்களில் இருந்து வரும் திட்டமிட்டகுழுக்கள்
  • நமது மாவட்டத்திலே உள்ள குழுக்கள் இவ்வாறு பலவாறான விடையங்களினால் திருட்டுச்செயற்பாடுகள் வழிப்பறிக்கொள்ளைகள் அதிகரித்துள்ளது.
  • உயிலங்குளம் பகுதியிலும் சங்கிலி அறுப்பு
  • தாழ்புபாடு வீதியில் கீரிச்சந்தியில் சங்கிலி அறுப்பு(தெரிய வந்தவைதன் தெரியாமல் எவ்வள்வோ.....)
பரவலாக கடைகள் கடைகள் உடைப்பு(ஒருவர் இருவரைத்தவிர ஏனையவர்கள் பொலிசில் முறைப்பாடு செய்வதில்லை பொலிசார் மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது)
இழந்தவர்கள் படும்துயரம் யாருக்கு தெரியும்......
பாதிக்கப்பட்டவர்கள்  கண்ணீருடன்.........

களவுசெயற்பாடுகள் எப்படி செய்கின்றார்கள் பாருங்கள்
  • ஹாஸ் கொண்டு பூட்டுக்கள் உடைக்கப்படுகின்றது
  • மயக்கமருந்து பாவித்தல்
  • பவுடர் தூவுதல்
  • பகலில் உளவுபார்த்து இரவில் கைவரிசையை காட்டுதல்
  •  போதைப்பொருளின் பாவனை

கதவுகளை யன்னல்களை நேரத்துடன் அடைத்தல் மின்குமிழ்களை எரிய விடுதல் பாதகாப்பானசெயற்பாடுகள் மேற்கொள்ளல்.
அந்தக்காலம் தான் இரவினில் திருட்டு கொள்ளையில் ஈடுபடுவார்கள் தற்போது பட்டப்பகலில் வெட்டவெளியில் நடக்கிறது கொள்ளை அதுவும் பகல்கொள்ளை  எனவே விழிப்பாய் இருங்கள். உங்களது வாசலில் தானே வாகனம் நிற்கிறது என்று அலட்சியப்படுத்த வேண்டாம் கவனமாய் இருங்கள்….

  • மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரிளின் கவனத்திற்கு திருட்டுக்கும்பலை பிடியுங்கள்.
  • மன்னார் பிரதேச சபை நகரசபை அதிகாரிகளின் கவனத்திற்கு வீதிகளில் இருள் சூழ்ந்திருக்கும் அனைத்து பகுதிகளிலும் மின்குமிழ்களைப்பொருத்துங்கள் வீதிகளில் வளர்ந்திருக்கும் கொடிகள் மரங்கள் குப்பைமேடுகள் போன்ற வற்றினை துப்பரவு செய்யுங்கள்.
  • மின்சார சபை அதிகாரிகளுக்கு மின்சாரத்தினை தங்கு தடையின்றி வழங்குங்கள்.
  • பொதுமக்களின் கவனத்திற்கு உங்களது வளவுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துங்கள் இருண்ட பகுதிகளில் மின்குமிழ்களை ஒளிர விடுங்கள்
  • குடியிருப்பற்ற காணிகளின் இனம்தெரியாதவர்களின் செயற்பாடுகள் அவதானியுங்கள்
  • இளைஞர்களே இந்த திருட்டுக்கும்பலை இல்லாதொழிக்க நீங்கள் தான் முன்வரவேண்டும் திருடர்களை இனங்கண்டு அவர்களை தண்டிப்பதன் மூலம் பல பாரியவிளைவுகளை தடுக்கலாம். முன்வாருங்கள்…
  • பிரதேச சபை உறுப்பினர்களே…நகரசபை உறுப்பினர்களே…பாராளுமன்ற உறுப்பினர்களே…வடமாகாண அமைச்சர்களே…அமைச்சர்களே…. உங்களின் நிலைப்பாடு என்ன…
நிம்மதியின்றி தூக்கம் இன்றி தவிக்கும் மக்களின் வாழ்வுக்கு தீர்வுதான் என்ன……..

தனிமையில் இருப்பதையும் துணிவற்றிருப்பதையும் குறையுங்கள்
எதுவானாலும் உங்களின் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான்
உடமையினையும் உயிரையும் காத்துக்கொள்ள உறுதியுடன் விழிப்பாய் இருங்கள்…

ஒற்றுமைதான் எதிரிக்கும் திருட்டிற்கும் பதிலடிகொடுப்பதற்கு உபாயமாகும் அபாயம் தவிர்ப்போம்….. 
 மன்னாரின் நடக்கும் அனைத்து தவறான செயற்பாடுகளையும்  முடிவுக்கு கொண்டுவர இளைஞர்கள்..........தாயாரா!!!

 -மன்னார்விழி-
மன்னார் மக்களுக்கோர் அறிவித்தல்…. Reviewed by Author on July 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.