அண்மைய செய்திகள்

recent
-

அமைச்­சர்­களை நீக்­கு­வ­தற்கு – விக்­னேஸ்வரனுக்கு அதி­கா­ர­மில்­லை­யாம்


டெனீஸ்­வ­ரன் வழக்­கில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வழங்­கி­யி­ருக்­கும் உத்­த­ர­வின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­களை நீக்­கும் அதி­கா­ரம் தற்­போது தன்­னி­டம் இல்லை என்று தெரி­வித்­தி­ருக்­கும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தற்­போது எழுந்­துள்ள குழப்ப நிலைக்கு உயர் நீதி­மன்­றத்­தின் தீர்­மா­னத்தை எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றோம் என்­கி­றார்.

வடக்கு மாகாண சபை­யில், டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரம் தொடர்­பில் நேற்று எழுப்­பப்­பட்ட சிறப்­பு­ரிமை பிரச்­சினை மீதான விவா­தத்­தில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: ஒழுங்­குப் பிரச்­சனை ஒன்று எழுப்­பப்­பட்­டுள்­ளது. அது நாம் எதிர்­பார்த்­த­து­தான். மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத் தீர்­மா­னம் பல­வி­த­மான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் நிமித்­தம் இந்த சபைக்கு சுருக்­க­மான ஒரு விளக்­கத்தை அளிக்­க­வேண்­டிய கடப்­பாடு எனக்­குள்­ளது.

அதி­கா­ர­மில்லை
உயர் நீதி­மன்­றத்­தின்­முன் மேன்­மு­றை­யீட்­டுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் இந்­தத் தீர்­மா­னத்­தில் மேன்­மு­றை­யிட்டு நீதி­மன்­றம் எந்த ஒரு மாகாண முத­ல­மைச்­சர் தானும் தமது அமைச்­சர் குழா­மின் அமைச்­சர் ஒரு­வரை நிய­மிக்­கவோ, பதவி இறக்­கவோ முடி­யாது என்ற கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அந்த அதி­கா­ரம் ஆளு­ந­ருக்கே உண்டு எனக் கூறி டெனீஸ்­வ­ர­னின் பதவி இறக்­கத்தை ஆளு­நர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அர­சி­த­ழில் பிர­சு­ரிக்­காத கார­ணத்­தி­னாலோ என்­னவோ டெனீஸ்­வ­ரன் தொடர்ந்து பத­வி­யில் இருக்­கின்­றார் என்று தீர்­மா­னித்­துள்­ளார்­கள்.

முரண்­நிலை

ஆனால் இந்­தத் தீர்­மா­னம் குழப்­பத்தை விளை­வித்­துள்­ளது. டெனீஸ்­வ­ர­னைச் சேர்த்­தால் அமைச்­சர் குழாம் ஆறாக மாறும். இது சட்­டத்­துக்­குப் புறம்­பா­னது. ஐந்­துக்­குக்­கூட அமைச்­சர்­கள் இருந்­தால் அது சட்­டத்­தின் ஏற்­பா­டு­க­ளுக்கு முர­ணாக அமை­யும்.

ஆறு பேரு­டன் அமைச்­சர் குழாம் செயற்­பட்­டால் அது அர­ச­மைப்­பின் ஏற்­பா­டு­க­ளுக்கு முரண்­பட்­ட­தாக ஆகி­வி­டும். சட்­ட­வ­லு­வற்­ற­தாக அமை­யும். அர­ச­மைப்­பின் ஏற்­பா­டு­க­ளுக்கு முர­ணாக செயற்­ப­டு­வது பெரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும். அர­ச­மைப்­பின் ஏற்­பா­டு­க­ளுக்கு முர­ணாக நடந்து கொள்ள நாங்­கள் தயா­ரில்லை.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­க­ளில் எம்­மால் இயைந்து அர­ச­மைப்­பின் ஏற்­பா­டு­களை மீற முடி­யாது. ஆக­வே­தான் நாங்­கள் இது­பற்­றிய உயர் நீதி­மன்ற தீர்­மா­னத்தை எதிர்­பார்த்து நிற்க வேண்­டிய நிலை உரு­வா­கி­யுள்­ளது.

சட்­டப்­பி­ரச்­சினை
இந்த வழக்­கில் மிக­வும் முக்­கி­ய­மான சட்­டப் பிரச்­சி­னை­கள் எழுந்­துள்­ளன. அவற்றை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்­கக் கூடி­ய­வர்­கள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­களே. உண்­மை­யில் அவர்­க­ளுக்கு மட்­டுமே இந்த அதி­கா­ரம் அர­ச­மைப்­பின் 125ஆம் இலக்க ஏற்­பாட்­டால் வழங்­கப்­பட்­டுள்­ளது.

எமது நிலைப்­பாடு மாகாண அமைச்­சர் குழா­மில் உள்ள அமைச்­சர்­களை நிய­மிக்­கும் மற்­றும் பதவி இறக்­கு­வ­தைத் தீர்­மா­னிப்­பது அந்­தந்த மாகா­ணங்­க­ளின் முத­ல­மைச்­சர்­க­ளையே சார்ந்­த­தா­கும் என்­பதே.

அர­ச­மைப்­பின் 154 எப்(5)இன் ஏற்­பா­டு­கள் பின்­வ­ரு­மாறு அமைந்­துள்­ளது,

‘‘மாகா­ண­மொன்­றின் சார்­பாக அமைக்­கப்­பெ­றும் மாகா­ண­ச­பை­யொன்­றின் மற்­றைய அமைச்­சர்­கள், சபை உறுப்­பி­னர்­க­ளின் மத்­தி­யில் இருந்து முத­ல­மைச்­ச­ரின் பரிந்­து­ரை­யின் பெய­ரில் ஆளு­ந­ரால் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள்’’. இந்த உறுப்­புரை அமைச்­சர்­களை எவ்­வாறு பதவி நீக்­கம் செய்­ய­லாம் என்­பது பற்றி எது­வும் கூற­வில்லை.

உயர்­நீ­தி­மன்­றத்தை எதிர்­பார்­பார்த்­தி­ருக்­கின்­றோம்
மேற்­படி உறுப்­பு­ரை­யின் ஏற்­பா­டு­க­ளைக் கவ­னித்­தீர்­க­ளா­னால் ஆளு­நர் தானாக அமைச்­சர் ஒரு­வரை நிய­மிக்க முடி­யாது. முத­ல­மைச்­ச­ரின் பரிந்­து­ரை­யின் பெய­ரா­லேயே அவர் எவ­ரை­யா­வது அமைச்­ச­ராக நிய­மிக்க முடி­யும். இது சம்­பந்­த­மா­கத் தானாக அவர் இயங்க முடி­யாது. தற்­போ­துள்ள நிலை­யில் ஐந்­துக்கு மேற்­பட்ட அமைச்­சர்­கள் பதவி வகித்­தால் அது சட்­டத்­திற்­குப் புறம்­பா­கும். எமது நட­வ­டிக்­கை­கள் சட்ட வலு­வற்­ற­தாக மாறி­வி­டு­வன. ஆகவே தான் நாங்­கள் உயர் நீதி­மன்ற தீர­மா­னத்தை எதிர்­பார்த்­துள்­ளோம்.

இதில் பல சிக்­கல்­கள் உள்­ளன. மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத் தீர்­மா­னப்­படி முத­ல­மைச்­சர் அமைச்­சர் ஒரு­வரை நிய­மிக்­கவோ பதவி இறக்­கவோ முடி­யாது. ஆகவே தற்­போது எந்த ஒரு அமைச்­ச­ரை­யும் பதவி இறக்க என்­னால் முடி­யாது. முன்­னர் எனது பரிந்­து­ரைக்கு அமைய தொடர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய பொறுப்பு ஆளு­ந­ருக்கு இருந்­தது. முத­ல­மைச்­சர் என்ற கட­மை­யில் இருந்து நான் தவ­ற­வில்லை. என் வரை­ய­றைக்­குள் இருந்து எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கை­களை நான் எடுத்­துள்­ளேன். அர­சி­த­ழில் பிர­சு­ரிப்­பது போன்­றவை எனது வரை­ய­றைக்கு அப்­பாற்­பட்­டன.

அதி­கா­ரப் பகிர்­வுக்கு என்ன நடந்­தது?
ஆளு­ந­ருக்கு அமைச்­சர்­களை நிய­மிக்­கும் அதி­கா­ரம் இருக்­கின்­ற­தென்­றால் அதி­கா­ரப் பகிர்­வுக்கு என்ன நடந்­தது என்ற கேள்வி எழும். நேர­டி­யா­கக் கொழும்பு அரசு மாகாண அமைச்­சர்­களை நிய­மித்து ஒற்­றை­யாட்­சியை நடத்த முடி­யு­மென்­றா­கின்­றது. இவ்­வா­றான ஒற்­றை­யாட்­சி­யை­யும் ஆளு­ந­ரின் சர்­வா­தி­கா­ரத்­தை­யுந்­தான் எம்­ம­வர்­கள் எதிர்­பார்க்­கின்­றார்­களோ எனக்­குத் தெரி­யாது.

தெற்­கில் உள்ள மாகாண சபை­க­ளை­யும் இவ்­வா­றான தீர்­மா­னங்­கள் பாதிக்­கின்­றன. அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் பதின்­மூன்­றாந் திருத்­தச் சட்­டத்­தின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டதா இல்­லையா என்ற அர­ச­மைப்­புச் சம்­பந்­த­மான விட­யத்­தை­யும் உயர் நீதி­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்­டும்.

ஒரு சில நாள்­க­ளுள் உயர் நீதி­மன்­றம் எமது மேன்­மு­றை­யீட்­டின் கார­ண­மா­கத் தீர்­மா­னம் ஒன்றை எடுக்க வேண்­டி­யி­ருக்­கும். இவை எனது சொந்­தக் கருத்­துக்­களே. வழக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தி­லும் உயர் நீதி­மன்­றத்­தி­லும் நட­வ­டிக்­கை­யில் இருப்­ப­தால் நீதி­மன்­றத் தீர்­மா­னங்­க­ளைப் பற்றி இந்­தச் சபை­யில் விவா­தம் நடத்­து­வது முறை­யா­காது என்­ப­தைச் சொல்லி வைக்­கின்­றேன் – என்­றார்.

அமைச்­சர்­களை நீக்­கு­வ­தற்கு – விக்­னேஸ்வரனுக்கு அதி­கா­ர­மில்­லை­யாம் Reviewed by Author on July 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.