அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் கைது! -


மனைவி, பிள்ளையிடமிருந்து பிரிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைக்கு அகதியான திலீபன் ஞானேஸ்வரன், இலங்கை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் அகதிகள் சபை குறித்த தகவலை வெளியிட்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தற்காலிக விஸா மறுக்கப்பட்டதையடுத்து, திலீபன் நேற்றைய தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். தமது மனைவி கார்த்திகா மற்றும் 11 மாத பெண் குழந்தை ஆகியோரிடமிருந்து பிரிக்கப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஞானேஸ்வரனின் சகோதரர், ஞானேஸ்வரன் செவ்வாய்க்கிழமை கொழும்பிற்கு சென்றவுடன், அங்கு வைத்து இலங்கை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதாகவும், பின்னர் அன்றிரவு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், அவர் எப்படியான குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுத்தார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்றும் ஞானேஸ்வரனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஞானேஸ்வரனின் விவகாரம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறித்த விடயத்தில் அவுஸ்திரேலியாவின் நாடுகடத்தல் கொள்கையை ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை கண்டித்துள்ளது.
30வயதான தீலிபன் என்ற இந்த இலங்கையர், கடந்த 2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக சென்றுள்ளார் பின்னர் 2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அவருடைய எதிர்கால துணைவியுடன் திருமணம் நடந்துள்ளது.

இதனையடுத்து அவர்களுக்கு கடந்த வருடமே பெண் குழந்தை பிறந்துள்ளது இந்தநிலையில், மனைவியும், குழந்தையும் அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற நிலையில், திலீபன் நாடுகடத்தப்பட்டுள்ளார்.





அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் கைது! - Reviewed by Author on July 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.