அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழா....சிறப்பாக இடம் பெற்றது---படங்கள்

தேசிய ரீதியாக வருடா வருடம் இடம் பெறும் தேசிய மட்ட மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழவிற்காக பங்கு பெருநர்களை தெரிவு செய்யும் நிகழ்வின் முதற் கட்டமாக மாவட்ட ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை(13) மன்னாரில் இடம் பெற்றுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை 13-07-2018 காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. 

சமூகசேவை திணைக்களமும் சமூக நலன் பிரிவு  கைத்தொழில் அமைச்சின் அனுசரணையுடன்   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மன்னார் மாவட்த்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களிலும் உள்ள மாற்றாற்றல் உள்ளவர்களை ஒருங்கிணைத்து குறித்த விளையாட்டு விழா இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலகங்களையும் சேர்ந்த 150 ற்கும் மேற்பட்ட மாற்றாற்றல் உடைய ஆண் ,பெண் இரு பாலாரும் போட்டியாளர்களாக குறித்த விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும்,   சான்றிதழ்களையும் பெற்று கொண்டனர்.

குறித்த மாவட்ட விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அணைத்து வீர வீராங்கனைகளும் வருகின்ற மாதங்களில் நடை பெற இருக்கின்ற தேசிய மட்ட விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.











மன்னார் மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழா....சிறப்பாக இடம் பெற்றது---படங்கள் Reviewed by Author on July 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.