அண்மைய செய்திகள்

recent
-

முடங்கும் நிலையில் வடமாகாண சபை! முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் -


வடமாகாண சபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் நிலையில் இருப்பதனால் அரசியலமைப்பு மீறல் ஒன்று இடம்பெறும் அபாயம் உள்ளமையினால் அமைச்சர் சபை ஒன்றை உருவாக்க ஆளுநருக்கு உடனடி ஆலோசனையை வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கோரும் வகையிலான தீர்மானம் ஒன்று இ ன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் விசேட அமர்விலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இத் தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்கு இலக்கம் Ca/ writ/285/2017இல் வழங்கப்பட்ட இடைக்கால கட்டளை மூலம் எழுந்துள்ள நிலைமையை கருத்தில் கொண்டும் குறித்த கட்டளை வழங்கப்பட்ட திகதியான 29.07.2018ல் இருந்து முறைப்படியான அமைச்சர் சபை ஒன்று வடமாகாண சபைக்கு முழுமையாக பொறுப்புக் கூறக்கூடிய வகையில் இல்லாத நிலையொன்று உருவாகியுள்ளது.

இதனால் உடனடியாக அரசியலமைப்பு மீறல் ஒன்று உ ருவாகும் என நியாயமான அச்சம் எழுந்துள்ளமையினையும், மக்களுக்கு சேவையாற்ற கூடி ய நிறைவேற்று தீர்மானங்களை எடுக்க முடியாதவாறு வடமாகாண சபை நிர்வாகம் முழுமையாக முடங்ககூடிய ஆபத்தான நிலமை ஏற்பட்டுள்ளதாலும்,
மாகாண சபையினது பிரதான கடமை யான சட்டவாக்க தத்துவத்தை பிரயோகிக்கும் நியதிச்சட்டங்களை ஆக்க முடியாத தேக்க நிலை ஒன்று உருவாகியுள்ளதாலும் அதன் விளைவாக மாகாண செயற்பாடுகளிற்கு மத்தியின் சட்டவாக்கங்களே பிரயோகமாகி அதிகாரப் பகிர்வுக் கோட்பாடே அர்த்தமற்றதாகி போய்விடுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாலும்,

முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அரசியலமைப்பின் உறுப்புரை 154 F (5) இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரது தத்துவத்தை முறையாகப் பயன்படுத்தி வடமாகாண சபைக்கு ஓர் முழுமையான அமைச்சர் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை எந்த தாமதமும் இல்லாமல் மாகாண ஆளுநருக்கு வழங்கவேண்டும் என சபை தீர்மானிக்கின்றது என குறிப்பிட்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் சபையில் இருந்த 19 மாகாணசபை உறுப்பினர்களாலும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், முதலமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

முடங்கும் நிலையில் வடமாகாண சபை! முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் - Reviewed by Author on July 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.