அண்மைய செய்திகள்

recent
-

தெய்வ நம்பிக்கையோடு வாழப் பழகுதல் வேண்டும்.


தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை தொடர் பில் பல்வேறு கோணங்களில் நாம் ஆராய முடியும்.
அவ்வாறான ஆய்வியலில் எங்கள் மக் களின் முன்னைய வாழ்க்கை என்பது தெய் வீகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

எதிலும் பாவபுண்ணியம் என்ற கோட்பாடு மேலோங்கி நிற்கும். பாவத்தைச் செய்தால், அது என்னையும் என் சந்ததியையும் நிர் மூலமாக்கும் என்ற கொள்கை எம் மக்களை அறத்தின் வழி நடத்திச் சென்றது.

பொருள் ஆசை மட்டோடு இருக்க, கூட்டுக் குடும்ப வாழ்க்கை இளம் பிள்ளைகளின் கட்டுப் பாட்டில் கவனம் செலுத்த, வேளாண் செய்கை மூலம் கிடைத்த நெல் உள்ளிட்ட தானியங்கள் உணவுப் பிரச்சினை இல்லை என்ற நிலை மையை ஏற்படுத்தியது.
இருப்பதை மற்றவர்களுக்கும் கொடுத்து அவர்களின் பசியையும் ஆற்றுகின்ற உயர்ந்த அறம் எம் முன்னோர்களின் வாழ்வின் இலக் காக இருந்தது.

வீட்டு வளர்ப்பு நாய் இறந்தால் கூட, அத னைப் புதைப்பதற்கு வெட்டப்பட்ட குழியில் வெள்ளைத் துணி விரித்து இறந்த நாயை அதன் மேல் வைத்து அந்த வெள்ளைத் துணி யால் நாயின் உடலை மூடிவிட்டு மண்ணைப் போடுகின்ற அளவில்,
எம் மக்களின் அன்பு மனிதர்கள் என்ற எல்லை கடந்து கடைப்பட்ட நாய்கள் மீதும் விரிந்து பரந்திருந்தது எனும்போது, எம் மக் களின் ஜீவகாருண்யம் எத்துணை தூரம் உயர்ந்திருந்தது என்பதை நாம் அனுமானிக்க முடியும்.

ஆனால், இன்று நிலைமை அதுவன்று. மனவக்கிரம் உச்சமாயிற்று. பாவ புண்ணியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மற்றவர்களின் பொருளைக் கபளீகரம் செய்வது கெட்டித்தனம் என்ற நினைப்புக்கு நம் மனங்கள் சிறுமைப் பட்டு விட்டன.
வீட்டில் வளர்த்த நாய் இறந்து விட்டால் அதனை மற்றவர் வீட்டு வாசலில் வீசி விட்டுப் போகின்ற அளவிலேயே இன்றைய வாழ்க்கை முறை உருவாகியுள்ளது.
இதற்கு மேலாக அரச அமைப்புக்களில் பணியாற்றுவோர் பொது மக்களை அலைக் கழிக்கின்றனர். எந்தப் பணியையும் விரை வாகச் செய்ய முடிவதில்லை.
மக்களை அலைக்காமல் பணியைச் செய்து கொடுக்க வேண்டுமென ஒரு பகுதி உத்தியோகத் தர்கள் நினைத்தாலும் அதனோடு இணைந்த மற்றையவர்களின் ஒத்துழைப்புக் கிடைப்பதாக இல்லை.

இதனை எதிர்த்துக் கதைத்தால், கெட்டவர் களின் செல்வாக்கு நல்லவர்களை வஞ்சித்து விடும் என்ற பயம் வேறு.
இப்படியாக எங்கள் நிலைமை மாறி வருகி றது. இதிலிருந்து மீண்டு ஒரு புதிய பாதையில், தெய்வீகத்தின் மீது நம்பிக்கை கொண்டு; பாவபுண்ணியம் என்ற விடயங்களைப் புரிந்து கொண்டு; தர்மத்தின் வழியில் செல்வதுதான் நம்மைப் படைத்த இறைவனுக்கு நாம் செய் யும் கைமாறு என்றுணர்ந்து நடப்பதற்கான வழிவகையைத் தேடுவதே இன்றைய முதன் மைத் தேவையாகும்.

-வலம்புரி-
தெய்வ நம்பிக்கையோடு வாழப் பழகுதல் வேண்டும். Reviewed by Author on July 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.