அண்மைய செய்திகள்

recent
-

உயர்தர பரீட்சை எழுதும் மாணவமாணவிகளுக்கு வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்


2018 க.பொ.த உயர்தர பரீட்சைகள்  ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1ம் திகதி வரையில் நடைபெற உள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றுகின்றனர். இதில் இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 446 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள்.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமாக அனுபப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாவிடின் 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0113 140 314 மற்றும் 0718 323 658 ஆகிய இலக்கங்களுக்கு ​தொடர்பு கொண்டு தொலைநகல் மூலம் பரீட்சை அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 க.பொ.த (உ/த)பரீட்சைக்கு

பரீட்சையை வெற்றி கொள்வது என்பது நீங்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறையிலும் பரீட்சை எழுதும்போது கடைபிடிக்கும் நுட்பங்களிலும் தங்கியுள்ளது.
பரீட்சையை வெற்றி கொள்ள...
1. நீங்கள் எவ்வளவு கற்றுள்ளீர்கள் என்பதைவிட பரீட்சைக்குத் தயாராக உள்ளீர்களா என்பது மிக முக்கியம். உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பரீட்சைக்குத் தயாராக இருப்பது பரீட்சையை வெற்றி கொள்ள உதவும்.
2 பரீட்சை பற்றிய பயம் (நுஒயஅழிhழடியை) “நான் பரீட்சையில் சித்தி அடைவேன்” என்ற நம்பிக்கை உளரீதியாக உங்களிடத்தில் வர வேண்டும். உளரீதியாக இத்தகைய தயார்படுத்தல் நீங்கள் நம்பிக்கையுடன் பரீட்சையை எதிர் கொள்வதற்கான நம்பிக்கையைத் தரும்.
3. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் உடலுக்கு ஆரோக்கியமான செயற்பாடுகள் மூலம் உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பரீட்சைக்கு சிறப்பாகத் தயாராவதற்கும் பரீட்சைக் களத்தில் நின்று சிறப்பாக பரீட்சை எழுதவும் உங்கள் ஆரோக்கியமான உடல்நிலைதான் துணைபுரியும்.
4. அறிவுரீதியாக தயாராவது என்பது நீங்கள் பரீட்சைக்காக கற்பதைக் குறிக்கும். ஆண்டு முழுவதும் உங்கள் அறிவு விருத்தியடைவதற்காகக் கற்ற நீங்கள்பரீட்சை நெருங்குகின்றபோது பரீட்சைக்காக கற்கப் பழகுங்கள். பல்தேர்வு வினாக்களில் சரியானதைத் தெரிவு செய்வதற்கும் பரீட்சையின் போது வினவப்படும் வினாக்களில் தெரிந்ததை மட்டுமன்றி தெரியாததையும் தெரிந்த மாதிரி எழுதுவதற்கும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. கால வரையறை

(Time specific)  (Time specific) அனைத்து விடயங்களையும் நீங்கள் அறிந்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை வெளிப்படுத்தத் தவறுகின்றபோது புள்ளிகளைப் பெறத் தவறி விடுவீர்கள்.
6. பரீட்சை எழுதும்போது பரீட்சை நுணுக்கங்களைக் கையாளுங்கள்
பரீட்சை நுணுக்கங்களே பரீட்சை வெற்றிக்கான சிறந்த சாதனங்கள். பல்தேர்வு வினாக்களுக்கு விடையளிப்பதில் நீங்கள் குழம்பிக் கொள்ளாமல் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு நன்றாக ஞாபகத்தில் பதிந்து கற்றுக் கொள்ளுங்கள். கட்டுரை வினாக்களுக்கு விடையளிக்கும்போது குறிப்பிட்ட விடயத்தை நன்றாக விளங்கி உங்கள் மொழிநடையில் விடை எழுதுங்கள்.

விடைகளை பெரிய பந்திகளாக அமைத்து திருத்துபவரை குழப்பத்திற்கு உள்ளாக்கி விடாதீர்கள். முக்கியமான விடயங்களை தெளிவாக விளங்கும்படி தலைப்பிட்டு பந்தி பிரித்து தெளிவாக எழுதுங்கள். இது விடைத்தாள்களைத் திருத்துபவர் நல்ல மனோநிலையில் உங்களுக்குப் புள்ளிகளை வழங்க உதவும். உங்கள் பரீட்சை விடைத்தாளைத் திருத்துபவர் எரிச்சலடையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டியவற்றை சுருக்கமாகவும் விரிவாகச் சொல்ல வேண்டியவற்றை விளக்கமாகவும் எழுதுங்கள். உங்களால் முடிந்தளவு உங்கள் கையெழுத்தை தெளிவாக எழுதுங்கள். விடைத்தாளைத் திருத்துபவர் உங்களுக்கு வினாவுக்கான விடை தெரியும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் விடைகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விடை தெரியும் என்பதாக அவர் வழங்கும் புள்ளிகளே நீங்கள் சிறந்த முறையில் பரீட்சையை வெற்றி பெற உதவும்.

சாதாரணமாக ஒருவரின் உடையைப் பார்த்து இவர் கற்றவர் எனவும் இவர் கற்றறிந்தவரல்ல எனவும் பலர் மனக் கணக்குப் போடுவதை கண்டிருப்பீர்கள். அதுபோலத்தான் பரீட்சைக்கும். நீங்கள் அளிக்கும் விடையைப் பொறுத்தே உங்களுக்கு குறிப்பிட்ட விடயம் தெரியும் அல்லது தெரியாது என்பது தீர்மானிக்கப்படும். எனவேஅனைத்து வினாக்களுக்கும் விடை தெரிந்தவர் போன்றே விடை அளியுங்கள். உங்களுக்கு சரியான விடை தெரியாது என்பதை அப்பாவித்தனமாக பரீட்சை விடைத்தாளில் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்.
கேட்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வினாக்களின் இலக்கங்கள்உப வினாக்களின் இலக்கங்கள் மிகத் தெளிவாகபார்த்தவுடன் விளங்கும் விதமாக சற்றுப் பெரிதாக இடைவெளிவிட்டு தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்துள்ளீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலதிக வினாக்களுக்கு வீணாக விடையளித்து நேரத்தை வீணாக்கிவிடாதீர்கள்.

உங்களுக்கு என்று ஒதுக்கித் தரப்பட்ட பரீட்சை கால அவகாசத்தை கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடியுமானவரை விரைவாக விடை எழுதுங்கள். முக்கிய விடயங்களை முற்படுத்தி எழுதுங்கள். விடைகளை மாத்திரம் எழுதுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்திற்கும் விடையளித்துவிட்டால் மீண்டும் உங்களுக்குத் தெரிந்த விடயங்களையும் இடமிருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது விடைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சுட்டிலக்கம்பக்க இலக்கம்வினா இலக்கம் என்பன ஒழுங்காக எழுதப்பட்டுள்ளதா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.
அனுமானித்துக் கொள்ளுங்கள்

என்ன என்ன வினாக்கள் வரும் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். ஆனால் அவற்றில் மாத்திரம் தங்கியிருக்காதீர்கள். அவற்றை சிறப்பாகக் கற்றுக் கொள்ளுங்கள். என்றாலும் சிலபோது அவை வினவப்படாவிட்டாலும் ஏனைய வினாக்களுக்கு விடையளிக்கக்கூடியதாக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் மூளையை தயார்படுத்திக் கொள்ளுங்கள் பயன்படுத்தி வெல்லுங்கள்
என்ன என்ன பகுதிகளிலிருந்து என்ன விடயத்தை எப்படிக் கேட்பார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவற்றிற்கு எப்படி விடையளிக்கலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இப்படி நீங்கள் உங்கள் மூளைக்குப் பயிற்சி அளிப்பது பரீட்சைக் களத்தில் உங்கள் மூளை சிறப்பாக செயற்பட உதவும்.

 அனைத்து மாணவமாணவிகளுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம்
சார்பாக வாழ்த்துக்கள் "வெற்றி நிச்சையம்"




உயர்தர பரீட்சை எழுதும் மாணவமாணவிகளுக்கு வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் Reviewed by Author on August 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.