அண்மைய செய்திகள்

recent
-

20ஆவது திருத்த சட்டமூலம் எங்களுக்காக வருகிறதாம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக் கைகளை நிறைவேற்ற இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை விரைவில் கொண்டுவர இருப்ப தாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனா ரத்ன ஒரு நல்ல மனிதர். தமிழ் மக்களின் பிரச் சினைகளை உணர்ந்து கொண்ட சிங்கள இனத்தவர் என்பதில் இருவேறு கருத்துக்கிடமில்லை. ஆனால் அவர் இங்கு கூறிய விடயம் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திப்பதுதான் கட்டாயமானது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், இருபதாவது திருத்த சட்டமூலத்தை விரைவில் கொண்டு வரவுள்ளோம் என்பது அவரின் அறிவிப்பு.

இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை என்ன? என்பதை அமைச்சர் ராஜித தெளிவுபடுத்திக் கூறியபின், 20ஆவது திருத்த சட்டமூலம் வர இருக்கிறது என்று கூறியிருந் தால் விளக்கத்தை அறிய முடிந்திருக்கும்.

மாறாக 20ஆவது திருத்த சட்டமூலத்தைக் கொண்டுவர இருக்கின்றோம். அவ்வாறு அத னைக் கொண்டு வருவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்று வதற்கு என்று கூறுவதற்குள்,
அரசியலமைப்புச் சீர்திருத்தம் அடிபட்டுப் போகிறதா என்ற கேள்வி எழவே செய்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்கு விதித்த நிபந்தனைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

குறித்த நிபந்தனைகளை நிறைவேற்ற காலஅவகாசம் கேட்ட இலங்கை அரசுக்கு அந்தக் காலஅவகாசத்தை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விட்டிருந்தது.

அதன்அடிப்படையில் ஐ.நா மனித உரிமை கள் பேரவையின் நிபந்தனைகளை நிறை வேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது.

ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரி க்கை என்று பொதுப்படையாக அமைச்சர் ராஜித கூறுவதற்குள், இலங்கை அரசாங்கத்துக்கு கால அவ காசம் வழங்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையும் உள்ளடங்குமா? என்ற ஐயம் ஏற்படும்.

எதுஎவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக இருபதாவது திருத்த சட்டமூலம் கொண்டு வரப்படுகிறது என்பதற்குள் தமிழ் மக்களை இன்னொரு தடவை ஏமாற்றுகின்ற நாடகத்தை இலங்கை அரசு அரங்கேற்றப் போகிறது என் பதுதான் உண்மை.

இவ்வாறு 20ஆவது திருத்த சட்டமூலம் தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதம் என்பதுபோல காட்டப்பட்டு, அதன்மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியலமைப்புச் சீர்திருத் தமும் இல்லை அரசியல் தீர்வுமில்லை என்பது உறுதிபடப் போகிறது.

ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக் கள் சார்ந்து உரியவாறான உரிமைகளை கேட்கவில்லை என்று தமிழ் மக்கள் குறைபடுகின்ற நேரத்தில் கூட்டமைப்பின் கோரிக் கையை நிறைவேற்ற 20ஆவது திருத்த சட்ட மூலம் விரைவில் வரவிருக்கிறது என்பதற்குள் இருதரப்பும் கூட்டுச் சேர்ந்து நடத்தும் திருகு தாளம் தமிழ் மக்களை அதலபாதாளத்தில் விழுத்தப் போகிறது என்பதுதான் நிறுதிட்ட மான உண்மை.
 -வலம்புரி-


20ஆவது திருத்த சட்டமூலம் எங்களுக்காக வருகிறதாம் Reviewed by Author on August 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.