அண்மைய செய்திகள்

recent
-

4 இலட்சம் ரூபாவிற்கு போலி பற்றுச்சீட்டு வழங்கிய வடக்கு அமைச்சர்!


வடமாகாண சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டு ஒன்ற போலியாதென பொதுக்கணக்காய்வுகுழு கண்டறிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கான பணத்தை வழங்காமல், நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்களை  கிடைத்துள்ளது

வடமாகாணசபை உறுப்பினர்களிற்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு திட்டங்களிற்கு பணம் ஒதுக்கப்படுவது வழக்கம். மாகாணசபை உறுப்பினர்கள் திட்டங்களை பரிந்துரைக்க, அந்த நிதி உரிய திணைக்களங்களின் ஊடாக சேவை வழங்குனர்களிற்கு வழங்கப்படும்

2017ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், நான்கு இலட்சம் ரூபா செலவில் மன்னாரில் மூக்கு கண்ணாடி வழங்கியிருந்தார் என மன்னார் பிராந்திய சுகாதார திணைக்களத்தில் பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பொதுகணக்காய்வு குழுவின் கணக்காய்வின் போது, குறித்த பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட வியாபார நிலையத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது, அது அழகுசாதான விற்பனை நிலையம் என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது என்ற தகவலை அந்த திணைக்களத்தின் உயரதிகாரியொருவர்  தெரிவித்தார். அழகு சாதான விற்பனை நிலையத்தில் மூக்கு கண்ணாடிகள் கொள்வனவு செய்யப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சரினால் போலி பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட்ட விடயம் அம்பலமானது.

 இதையடுத்து, குறித்த நான்கு இலட்சம் ரூபாவும் அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வழங்கப்படாமல், மாகாண நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்தின் பின்னர், இந்த வருடம் அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் மன்னார் சுகாதார திணைக்களத்தின் ஊடாக எந்த ஒதுக்கீட்டையும் செய்யவில்லையென்ற தகவலையும் பெற்றுள்ளது.

செய்தி மூலம்-தமிழ்பக்கம் 
4 இலட்சம் ரூபாவிற்கு போலி பற்றுச்சீட்டு வழங்கிய வடக்கு அமைச்சர்! Reviewed by Author on August 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.