அண்மைய செய்திகள்

recent
-

2 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்ற அணி!


கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் ஆல்ரவுண்டர் பொல்லார்ட் தன்னுடைய முதல் டி20 சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் போல, வெஸ்ட் இண்டீசிலும் கரீபியன் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதிலும் வெளிநாட்டு வீரர்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான Barbados Tridents அணியும், பொல்லார்ட் தலைமையிலான St Lucia Stars அணியும் மோதின. அதன் படி டாஸ் வென்ற பொல்லார்ட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் ஒருபுறம் ஏமாற்றம் அளித்து 0 ரன்களில் வெளியேறினாலும், மறுபுறம் Andre Fletcher சிறப்பானதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய Rahkeem Cornwall, வந்தவுடனே படபடவென பட்டாசு போல 11 பந்துகளில் 30 ரன்களை குவித்து Riaz பந்துவீச்சில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்தார்.

பின்னர் வந்த சிம்மன்ஸ் வந்த வேகத்தில் நடையை கட்ட, அணியினை வலுவான கட்டத்திற்கு எடுத்து செல்லும் முனைப்பில் பொல்லார்ட் தன்னுடைய அசுர பலத்தை காட்ட ஆரம்பித்தார். அதன் விளைவாக 54 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.
அதேசமயம் மறுமுனையில் விளையாடிய Fletcher 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்திருந்தார். இறுதியில் பொல்லார்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவிந்திருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய Barbados அணியின் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஆட்டநேர முடிவில் 188 ரன்கள் மட்டுமே குவிந்திருந்தனர். அணியில் அதிகபட்சமாக Dwayne Smith 58 ரன்கள் குவித்திருந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கரீபியன் லீக் போட்டியில் இதுவரை ஒரு போட்டியில் கூட வென்றிராத St Lucia Stars அணி நேற்றைய போட்டியின் மூலம் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது.
கரீபியன் லீக் தொடரில் இதற்கு முன்னதாக Jamaica Tallawahs அணிதான் அதிகபட்சமாக 225 ரன்கள் குவிந்திருந்தது. நேற்றைய போட்டியின் மூலம் அந்த சாதனையை St Lucia Stars அணி தகர்த்தெறிந்துவிட்டது.
அதேசமயம், நேற்றைய போட்டியில் Andre Fletcher - Kieron Pollard இருவரின் பார்ட்னர்ஷிப்பில் குவிக்கப்பட்ட 148 ரன்களே கரீபியன் தொடரில் குவிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும்.
2 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்ற அணி! Reviewed by Author on August 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.