அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சில் கனமழை! இருளில் மூழ்கிய வீடுகள்:


பிரான்சில் கனமழை பெய்து வருவதால், 40,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பகுதிகளில் நீர் ஆற்று வெள்ளம் போல் ஓடின.

அதுமட்டுமின்றி மழையுடன் பயங்கர மின்னலும் ஏற்பட்டதால், ஏராளாமான வீடுகள் இருளில் மூழ்கின. குறிப்பாக Dordogne பகுதியில் இருக்கும் ஆறாயிரம் வீடுகளுக்கு மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து Lot-et-Garonne பகுதியில் 1500 வீடுகளும் இருளில் மூழ்கின. நேற்று நள்ளிரவில் மட்டும் மொத்தமாக 40,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது.

அதன் பின் மின்சார ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால், மின் தடைகள் சீக்கிரம் சரி செய்யப்பட்டன. தற்போது வரை வந்த தகவலின் படி 40,000 வீடுகளில் இருந்து, 19,000 வீடுகளாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், தென் மேற்கு பிரான்சில் உள்ள 22 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழை காரணமாக வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், ஏராளமானோர் ஹெலிகாப்டர் உதவியின் மூலம் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.

அதிலும் Saint-Julien-de-Peyrolas பகுதியில் சம்மர் கேம்பிற்காக வந்த 119 குழந்தைகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதில் ஜெர்மனைச் சேர்ந்த நபர் ஒருவர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்பு படையினர் மீட்டு பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருவதாகவும், தற்போது வரை 1600 பேர் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது குறித்த முழு விபரம் வெளியாகவில்லை.



பிரான்சில் கனமழை! இருளில் மூழ்கிய வீடுகள்: Reviewed by Author on August 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.