அண்மைய செய்திகள்

recent
-

புதிய புலம்பெயர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கும் ஜேர்மனி:


நீண்ட காலமாகவே ஜேர்மனி நிறுவனங்களும் கூட்டமைப்புகளும் கல்வித் துறை சாரா துறைகளில் பணி புரிவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து திறன் படைத்த பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்த நிலையில், தற்போதுதான் அந்த சத்தத்திற்கு ஜேர்மனி அரசு செவி சாய்த்திருக்கிறது.

ஆம், ஜேர்மனி ஒரு புதிய புலம்பெயர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. அந்த சட்டத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத தகுதி வாய்ந்த திறன் பெற்ற வல்லுனர்கள் ஜேர்மனிக்கு வரவேற்கப்படுகிறார்கள்.
ஒரு படி மேலே போய் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் வல்லுநர்கள் தங்கள் தொழிற்திறமையை நிரூபித்துக் காட்டக் கூடுமானால் அவர்கள் முறைப்படி ஒரு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஜேர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை என்று கூட ஒரு தகவல் தெரிவிக்கிறது.

அது மட்டுமின்றி அவர்கள் ஜேர்மனிக்கு வந்து ஒரு சரியான வேலையைத் தேடிக்கொள்ளும் வரையில் ஜேர்மனியில் தங்க அனுமதிக்கப்படுவதோடு பிழைப்புக்காக தற்காலிகமாக ஏதேனும் ஒரு வேலையைத் தேடிக்கொள்ளலாம்.
உதாரணமாக வேறு ஒரு நாட்டிலிருந்து ஜேர்மனிக்கு வரும் ஒரு பொறியாளர், தனக்கு ஒரு பொறியாளர் பணி கிடைக்கும் வரையில் தனது அன்றாட தேவைகளுக்காக ஒரு உணவகத்தில் பணி புரியலாம்.
அதே நேரத்தில் பொது அமைப்புகளில் அவர்களுக்கு இடமில்லை. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், தகுதி வாய்ந்த ஒருவர் தனது துறையில் வேலையைத் தேடிக்கொண்டு உழைத்து வருவாய் ஈட்டிக்கொள்ளலாமேயொழிய எந்த துறையிலும் திறன் இல்லாதவர்கள் முறையான தொழில் கற்காதவர்கள் சொகுசாக வாழ்வதற்கு ஜேர்மனியில் இடமில்லை.

அதே நேரத்தில் இந்த புது சட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத எத்தனை பேர் ஜேர்மனியில் ஆண்டொன்றிற்கு வேலை தேட அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
அதேபோல் அகதிகள் தங்கள் நிலையை, அங்கீகரிக்கப்பட்ட புகலிடம் கோருவோராக மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்களா என்பதும் தெளிவாக தெரியவில்லை. புதிய சட்டம் இறுதி செய்யப்பட்ட பின்னரே இது போன்ற விடயங்கள் உறுதி செய்யப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
சில புள்ளிவிவரங்களின்படி ஜேர்மனி சமூக அமைப்பு நீண்டகாலம் குலையாமல் நிலை நிற்க ஆண்டுக்கு 400,000 முதல் 500,000 புலம்பெயர்வோரின் பங்களிப்பு தேவைப்படுகிறது.
ஆக, இந்த புதிய சட்டம் எப்போது இறுதி செய்யப்படும் என்பது ஒரு பக்கம் இருக்க, தற்போதைய கணக்குப்படி தகுதி வாய்ந்தோருக்கு 1.2 மில்லியன் வேலை வாய்ப்புகள் ஜேர்மனியில் தயாராக உள்ளன என்பது மட்டும் ஒரு நல்ல செய்தி ஆகும்.

புதிய புலம்பெயர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கும் ஜேர்மனி: Reviewed by Author on August 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.