அண்மைய செய்திகள்

recent
-

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பலன்கள் -


கீரை வகைகளில் ஒன்றான கரிசலாங்கண்ணி சிறு செடி வகையைச் சார்ந்தது, இதில் இரும்புச்சத்தும் ஏராளமான தாதுசத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

கரிசலாங்கண்ணி கீரை உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கவும் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யவும் உதவுகின்றன.
மேலும் சளி, இருமல், அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை குணமாக்கும்.

மருத்துவ பயன்கள்
  • கரிசலாங்கண்ணி கீரையாகத் தொடர்ந்து உணவில் சேர்த்து வர மங்கலான கண் பார்வை தெளிவு பெறும்.
  • இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும், ஈறுகள் பலப்படும்.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.
  • மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சமஅளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும்.
  • ரத்த சோகை படிப்படியாக குறைய கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை முழுமையாக குணமடையும்.
  • கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். மேலும் முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.
  • இளநரை மறைய கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலர்த்தி சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் ½ தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வரை இவ்வாறு சாப்பிட வர இளநரை மறையும்.

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பலன்கள் - Reviewed by Author on August 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.