அண்மைய செய்திகள்

recent
-

மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் வடக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற மருத்துவ முகாம்-படம்

மீள் குடியேறிய முள்ளிக்குளம் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.

முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம் பெயர்ந்து சென்று மீண்டும் தமது சொந்த கிராமத்தில் மீள் குடியேறியுள்ளனர்.தற்போது வரை நூறு குடும்பங்கள் வரை தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் வயோதிபர்கள் என  நூறு குடும்பங்களைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் தற்காலிக கூடாரங்களினுள் வாழ்ந்து வருகின்றனர்.குறித்த மக்கள் மருத்து வசதிகளை பெற்றுக்கொள்ள சிலாபத்துறை வைத்தியசாலைக்கே சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் மற்றும் முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் லியோ ஊடாக தமது கிராமத்தில் மருந்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வடமாகாண சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் குறித்த கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

குறித்த ஆலோசனைகளுக்கு அமைவாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணியாளர்கள்,மற்றும் மருத்துவ வசதிகளுடன் இன்று சனிக்கிழமை (18) காலை முள்ளிக்குளம் கிராமத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள பாடசாலை ஒன்றில் இலவச மருத்துவ முகாமை மேற்கொண்டனர்.

வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனுடன் இணைந்து மடு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ராஜன் லெம்பேட் இணைந்து வைத்திய பரிசோதரனகளை மேற்கொண்டதோடு,மருந்து பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

குறித்த மருத்துவ முகாமின் போது குறித்த கிராமத்தில் மீள் குடியேறியுள்ள அதிகலவான மக்கள் பயணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 











மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் வடக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற மருத்துவ முகாம்-படம் Reviewed by Author on August 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.