அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச சமய நல்லிணக்கக் குழு அங்குரார்ப்பனம் (படம்)


சமயங்களினூடாக நல்லிணக்கம் காணுதல் உளவள பயிற்சி கருத்தரங்கமும் முசலி பிரதேச சமய நல்லிணக்க குழு அமைக்கும் நிகழ்வும் முசலி பிரதேச
செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 18-08-2018 நடை பெற்றது.

முசலி சிலாபத்துறை சந்தியில்அமைக்கப்பட்டிருந்த அந்தோணியார் சிலை  கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  இணந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டிருந்தது இதனால் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றி தொடர்ச்சியாக அது நீடித்த படி இருந்தது.

எனவே இந்த முரண்பாடானது நீடிக்கப்படாமல் நடுநிலைப்படுத்தும் நோக்கில் ஒற்றுமை விட்டுக்கொடுப்புகளுடனும் புரிந்துனர்வுகளுடனும் வாழ்வதற்கு மன ரீதியாக பொதுமக்கள் எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்வது பற்றி உளவள ஆற்றுப்படுத்தலுக்காக
மன்னாரில் உள்ள சர்வமத பேரவையுடன் இணைந்து ஓபன்(OPENE) நிறுவனத்தின்அணுசரணையுடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்குரிய உளவியல் வளவாளராக வைத்தியர் ஆர்.புஸ்பகாந்தன்  வவுனியாவிலிருந்து வருகை தந்து உளவியல் பயிற்சிகளை மேற்கொண்டார்.

சமயங்களினூடாக எவ்வாறு நல்லிணக்கம் காணுதல் பற்றியும் அதே சமயங்களினூடாக சமாதாதனத்தை கட்டி எழுப்புதல் போன்ற செயற்பாடுகளுக்கு இளைஞர்கள் மற்றும் மதத் தலைவர்களின் பங்குகள் பற்றியும் கருத்துக்கள் பகிரப்பட்டது .

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட சர்வமத பேரவை தலைவர்கள் முசலி பிரதேச இளைஞர் யுவதிகள் சமூக அமைப்புகள் முசலி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது மன்னார் மாவட்ட சர்வமத குழுவின் ஏற்பாட்டில் தேசிய சமாதான பேரவையின் திட்ட அலுவலர் அன்ரன் மெடோசன் பெரேரா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் இறுதியில் முசலி பிரதேச சமய நல்லிணக்க குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால்  அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபப்பட்டது.
மொத்தம் முப்பது நபர்கள் கொண்ட முசலி பிரதேச சமய நல்லினக்க குழுவில்  முஸ்லிம்கள் சார்பாக மூன்று மதத் தலைவர்களும் ஏழு அங்கத்தவர்களும் பங்கு பற்றுவார்கள்.

 அதே போல் கிறிஸ்தவர்கள் மொத்தம் ஏழு பேர் கொண்ட குழுவில் இரண்டு மதத் தலைவர்களும் ஐந்து அங்கத்தவர்களும் உள்ளடங்குவார்கள்.

 அடுத்தபடியாக உள்ள திருச்சபைகளில் இரண்டு மதத்தலைவர்களும் மூன்று அங்கத்தவர்களும் பங்குபற்றுவார்கள் சைவ சமயத்தில் இரண்டு மதத்தலைவர்களும் மூன்று அங்கத்தவர்களும் பங்குபற்றுவார்கள் பௌத்த மதத்தில் ஒரு மதத் தலைவரும் ஒரு அங்கத்தவரும் பங்குபற்றுவார்கள்.

 இந்த அமைப்பானது ஒவ்வொரு மாதமும் கூடி கலந்துரையாடி பிரதேசத்திற்குள் ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்களால் தீர்க்கமுடியாத பட்சத்தில் அந்த பிரச்சனையை மன்னார் மாவட்ட சர்வமத பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று அந்த நிகழ்வில் தீர்மானிக்கப்பட்டது.



முசலி பிரதேச சமய நல்லிணக்கக் குழு அங்குரார்ப்பனம் (படம்) Reviewed by Author on August 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.