அண்மைய செய்திகள்

recent
-

வற்றிப்போன குளங்களால் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் மீனவர்கள் -


திருகோணமலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக அதிகளவில் குளங்கள் வற்றிப்போயுள்ள நிலையில் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வரும் மீனவர்கள் மிகவும் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயநிலை உள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

குளங்களில் நீர் வற்றிப்போய் காணப்படுவதினால் மீனவர்களின் குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கூட கஸ்டப்படுவதாகவும் மாவட்டத்தில் அதிகளவான பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
குளங்களை நம்பி வாழ்ந்து வரும் மீனவக் குடும்பங்களுக்கு வறட்சியான காலப்பகுதியில் நிவாரணம் வழங்குவதற்குரிய ஒழுங்குகளை பிரதேச செயலகங்களும், மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகமும் முன்னெடுக்க வேண்டுமெனவும் மீனவக் குடும்பங்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் அரசாங்கத்தினால் அரச அதிகாரிகளுக்கு பல காப்புறுதி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் குளங்களை நம்பி வாழும் மீனவக் குடும்பங்களுக்கு எதுவித காப்புறுதி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளைப் போன்று மீனவர்களுக்கும் திட்டங்களை முன்னெடுப்பதுடன் நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
வற்றிப்போன குளங்களால் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் மீனவர்கள் - Reviewed by Author on August 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.