அண்மைய செய்திகள்

recent
-

விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சுவிஸ் குமார் உள்ளிட்டவர்கள் வழக்கு தாக்கல்!


யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் தாக்கல் செய்துய்ய மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, குறித்த மனு டிசம்பர் 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த அனைவரும் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நளின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன அகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதுடன், 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டை மேற்கொண்டிருந்தனர்.

யாழ். மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும், உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சுவிஸ் குமார் உள்ளிட்டவர்கள் வழக்கு தாக்கல்! Reviewed by Author on August 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.