அண்மைய செய்திகள்

recent
-

அகதிகள் விடயத்தில் ஒரு வழியாக மனமிறங்கிய பிரான்ஸ்:


சமீபத்தில் ஜேர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் லக்ஸம்பார்க் ஆகிய நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி சுமார் 60 அகதிகளை ஏற்றுக் கொள்ள பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
மனிதநேய மீட்புப் படகான Aquarius மீட்ட அகதிகளில் 59 பேரை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டது.
அவர்கள் Charles de Gaulle விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் சூடானைச் சேர்ந்தவர்கள். சோமாலியா, எரித்ரியா மற்றும் சாட் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அவர்களில் அடங்குவார்கள்.

ஆகஸ்டு மாதம் 11ஆம் திகதி 141 அகதிகளை மீட்ட பின்னர் பல நாட்கள் அந்த படகு அலைக்கழிக்கப்பட்டது.
கடைசியாக செய்யப்பட்ட குறிப்பிட்ட ஒப்பந்தத்தின்படி மால்டாவில் கரையிறங்க அந்த படகு அனுமதிக்கப்பட்டது.
Aquarius பிரெஞ்சு ஜேர்மனி தொண்டு நிறுவனங்கள் இணைந்து இயக்கும் படகாகும்.
ஜூன் மாதம் 630 அகதிகளுடன் ஏழு நாட்கள் அந்த படகு கடலில் சிக்கிக் கொண்டது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு புலம்பெயர்தல் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலகம் 59 அகதிகள் பிரான்ஸ் வந்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளது. அவர்களில் 37 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள் 5 பேர் குழந்தைகள்.


அகதிகள் விடயத்தில் ஒரு வழியாக மனமிறங்கிய பிரான்ஸ்: Reviewed by Author on September 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.