அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்


வடகிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்படும் 12 வருடங்கள் ஆகியும்  தங்களுக்கு வழங்கபட  வேண்டிய விவசாய காணி வழங்கப்படவில்லை என்பதன் அடிப்படையில்.......
மன்னார் தேவன் பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 53 பேர் தங்களுக்கு இன்னமும் விவசாய காணிகளை வழங்கவில்லை என கோரி பல்வேறு தடவைகள் மாந்தை பிரதேச செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் உரிய பதில் வழங்கப்படாத பட்சத்தில் தேவன் பிட்டி பிரதேசத்தை சேர்ந்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் மன்னார் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் இன்று 17-09-2018 மதியம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். 

மாந்தைமேற்கு பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டாலும் ஆறுமாத காலம் மாத்திரமே மீன் பிடியை மேற்கொள்ள முடியும்

அதன் காரனமாக ஏனைய ஆறு மாத காலமும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு; விவசாய செய்கைகளை மேற்கொள்வதற்காக விவசாய காணிகளை 1992 ஆண்டு மாந்தை மேற்கு பிரதேச செயளாலரின் ஆலோசனைக்கு அமைவாக பிரதேச மக்கள் கோரி இருந்தனர்

 இதன் பிரகாரம்  2006 ஆண்டு 53 நபர்களுக்கு பாலி ஆறு மற்றும் வெள்ளாங்குளம் அருகே அமைந்துள்ள காணிகளை வழங்க கோரி வடகிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் பெயர் விபரங்கள் அடங்கிய அனுமதி வழங்கப்பட்ட போதிலும் 12 வருடங்கள் கடந்தும் இது வரை மாந்தை பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு எந்தவித காணிகளும் வழங்கப்படவில்லை எனவும் இதுவரை எழுத்து பூர்வமான பதில்களும் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தற்போது தாங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் எனவே தங்களுக்கு வழங்க தீர்மானித்திருந்த காணிகளை விரைவாக பெற்றுதார உதவி கோரியும் மன்னார் மனித உரிமை ஆணைகுழுவின் உப காரியாளயத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.



















மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் புகார் Reviewed by Author on September 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.