அண்மைய செய்திகள்

recent
-

கறுப்பு மலர்........


கறுப்பு மலர்


கல்லூரியில் ஏற்படுகின்ற காதல் பொதுவானது தான் காதலிப்பவர்கள் எதைப்பார்த்து காதலிக்கின்றார்கள்….???

அழகா….?
அறிவா….?
பணமா…..?
செல்வாக்கா…?
இதில் எல்லாமே இருக்க வேண்டும் இப்போதைய காதலுக்கு….. அன்றைய காதல் அப்படியா…அன்பு ஒன்றுக்காய் அடை கிடக்கும் ஆண்டுகள் பல இன்றைய காதலில் அன்பு இல்லாமலில்லை இருப்பினும் பெரிதாக இல்லை…இவை எதுவுமே இல்லாதவள் தான் மலர் சிரித்தால் தான் அவள் நிற்கிறாள் என்பதே தெரியும் இல்லையென்றால் அவள் வாய் திறந்து பேச வேண்டும் இவையிரண்டும் இல்லையென்றால் அவள் நின்றாலும்….

கண்ணிருந்தா..... காதல் வரும்…அழகான பெண்ணிருந்த ஆசவரும் பேச வரும்…கறுப்பு என்றாலும் கஸ்த்தூரி என்பார்கள் ம்ம்ம் இவள் கஸ்த்தூரி அல்ல கிண்டி வைத்த கேசரி அங்கங்கள் அபாரா வளர்ச்சி அழகென்பதோ வீழ்ச்சி  அவன் செய்த சூழ்ச்சி அறியாமல் விழுந்தாள் இந்த பட்சி ஆம் அதே கல்லூரியில் பயிலும் அஜித் அழகோ அழகு கிட்டத்தட் என நடிகர் அஜித்தைப்போலவே இருப்பான்.....

  அழகு அறிவு பணம் செல்வாக்கு சொல்வாக்கு எல்லாமே வரம் பெற்று வந்தவன் போலே….. அத்தனையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தான் அந்தக்காட்டில் சிங்கம் ராஜா போல இந்தக்கல்லூரியில் இவன்தான்  ராஜா இவனில் மயக்கம் கொண்ட ரோஜாக்கள் தான் கல்லூரிக்காதலன் கனவு மன்மதன் இவன்
இவன் பார்வை என்னில் விழாதா…. என ஏங்கும் பெண்கள் இவனை பார்த்து பார்த்து ரசிப்பதும் சிரிப்பதும் உரசிச்செல்வதும் வாடிக்கைலயானதுதான் ஒரு முறை உரசினால் ஒரு வாரம் உணவு தேவையில்லை என்பது தோழிகள் கருத்து..

பெரிதாக பேசமாட்டான் சத்தம் இல்லாமல் சாதிப்பான் விரும்பியதை எதுவானாலும் சொந்தமாக்கிக்கொள்வான் நிலையாக அல்ல தேவைக்கு மட்டும்…. மலர் அங்கம் தங்கம் இல்லையென்றாலும் அவள் குணத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தவள் பிறருக்கு உதவி செய்யவே பிறந்தவள் எல்லோருடனும் அன்பாக நெருங்கிப்பழகுவாள் இந்தக்காதல் கத்தரிக்காய் எல்லாம் அவளுக்குப்பிடிக்காது  காதலிப்பவர்களைக்கண்டால் பிசாசுகளை பார்ப்பது போல…!!!
ஆம்… ஆம்… ஆம்…இந்தக்கறுப்புக்கண்ணாடியை யார்தான் போட்டுக்கொள்ள விரும்புவார்கள் அத்தனை பெண்களின் பார்வையும் அஜித்தின் மீது மொய்க்க அஜித்தின் பார்வையென்னவோ அந்த கறுப்பு மலரில் தான் மேய்ந்தது கல்லூரிக்கே தலை சுற்றியது.
அந்தக்கல்லூரியில் கிளியோபற்ரா இல்லா விட்டாலும் அசின் த்திரிஷா தமன்னா அமலா பால் என்று பல அழகிகள் இருக்க இவன் ஏன் இவள் பின்னால் அலைகிறான் நாய் போல…

இவனின் அழகிற்கும் அறிவிற்கும் பணத்திற்கும் செல்வாக்கிற்கும் இவள் அருகில் நிற்க கூட தகுதியில்லாதவள் மலர்.. அத்தனை வியப்புக்கும் கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைத்தது போல இதுதான் உண்மையான காதல் காதலுக்கு கண் தெரியாது…ஓக்கே இதுக்கு எதுவுமே தெரியாது….
கல்லூரியே இவன் செயல் கண்டு வியந்தது கறுப்பு மலரோ கண்டு கொள்ளவே இல்லை… என்னடி உனக்கு லூசா…நீன் ஏன் அவனை இப்படி அலைய விடுறா… அவன் பார்வைக்கு ஏங்கும் பாவைகள் கூட்டம் இருக்க அவன் உன்னையே தினம் சுற்றி வாறான்.... ஒரு நாள் கூட என்றாலும் அவனோட வாழ்ந்திற்று போயிருவன் நான் என்ன ஒரு மணி நேரமென்றாலும் அவனுடன் வாழ எத்தனையோ பெண்கள் எங்கள் கல்லூரியிலே இருக்கின்றார்கள்......

நீ என்னடி பெரிய பிகு பண்ணுறா…
நீ என்ன பெரிய கிளியோபற்றாவா..
ஒரு முறையேனும் உன் முகத்தை கண்ணாடியில் பாரு…..

அதன் பின் அவனைப்பாரு…அவன் காதல் உனக்கு புரியும்.
கண்ணாடியைப்பாரு என்று சொன்னதும் இவள் முழுகினால் தானே வடிவாய் இருப்பாள் என பக்கத்து வீட்டு தவம் அக்கா சொல்வது ஞாபகத்திற்கு வந்தது. சிந்தனையில் ஆழ்ந்தால் அவனின் பார்வையும் தோழிகளின் பேச்சும் அவளை காதல் வலையில் சிக்கவைத்தது இது வரை காதலை வெறுத்தவள் காதலை தூக்கி தலையில் வைத்தாள்.

காலம் உருண்டோடியது கண்டு கதைத்தவர்கள் உண்டு கதைத்தார்கள் காதல் ரசம் இன்பரசம் அருந்தியது. கலர்ந்தார்கள் கறுப்பும் வெள்ளையும் ஒன்றாகியது. கலியாணம் எனும் சடங்கின் பின் நடப்பது முன்னே நடந்தது. காலம் தனது கைகளை உயர்த்தியது. கற்பமானாள் கறுப்பு மலர் இச்செய்தி கேட்டவுடன் கட்டறுத்த காளைபோல பொங்கினான் அஜித் நானா நான் இல்லை உயிர் என்றான் கன்னம் உரசியவன் தேன்கிண்ணம் என்றவன் கட்டியனைத்தவன் இன்று பிச்சைக்கிண்ணம் என்கிறானே…!!!

இப்போது தான் அவள் உணர்ந்தால் தான் வாழ்வின் கிடங்கில் வீழ்ந்து கிடப்பதை கதறியழுதால் காவல் நிலையம் ஏறினால் கல்லூரி நண்பிகளின் சாட்சியான வார்த்தைகளால் கைதானான் அஜித் ஆம் இவன் இப்படி பல பெண்களின் வாழ்வில் தானாகவே இறங்கி விளையாடுவதுதான்  இவன் பழக்கம் அறிவும் அழகும் பணமும் பெண்களை இவன் வலையில் விழ வைக்கும் இவனது பணமும் செல்வாக்கும் காக்கும்…
தீயாய் பரவியது இச்செய்தி கேட்டு கறுப்பு மலரின் பெற்றோர் தலை முழுகினர் தனியே விடப்பட்டாள் வைத்திய சாலையில் கண்மூடித்திறப்பதற்குள் பெற்று விட்டாள் ஒரு ஆண் குழந்தையை உரித்து வைத்தது போல அவனேதான் அஜித் போலவே பெற்ற குழந்தையோடு  போனாள் நீதி கடைக்குமென காவல் நிலையம் நீதி ஏற்கனவே நிதியுடன் கடல் கடந்து போயிருப்பது அப்போதுதான் தெரிந்தது அஜித் பணத்தினை வாரியிறைக்க பாதுகாப்பாக வெளிநாடு சென்றான் என்ற செய்தி இடியாய் இறங்கியது மலரின் காதில்…

காதல் என்ற போர்வைக்குள் காமத்தின் சூழ்ச்சியால் செற்பநேர மகிழ்சிக்காக களவாடப்பட்டு சிதைக்கப்பட்ட தன்வாழ்வை எண்ணினாள்-கலங்கினால்-கதறினாள்-கண்ணீர் விட்டு அழுதாள் எதுவுமே அறியாமல் அயர்ந்து துங்கும் தனது பிள்ளை போலவே பெண்கள் தங்களை இழப்பது தற்போதைய சூழலிலே…

தாய் தந்தை உறவினர் நண்பர்கள் எல்லோரும் ஏளனமாய் நோக்க இவள் தூக்கில் தொங்கி இருக்க வேண்டும் அது தானே இலகுவான விடையம்;…..
ஆனால் அவள்  தூக்கில் தொங்க வில்லை துடைத்தாள் விழிகளை உடைத்தாள் தடைகளை தனது வழியைத்தேடி நடந்தாள்…
சிறுவர் இல்லம் நடத்தும் அருட்தந்தையிடம் தனக்கு நேர்ந்த அநீதியை விளக்கினாள் தனது குழந்தையை பொறுப்பெடுக்க வேண்டினாள் மாதாமாதம் பணம் தருவதாகவும் எந்தச்சூழ்நிலையிலும் இந்த ரகசியத்தினை யாரிடமும் சொல்ல வேண்டாம் குறிப்பாக என்மகனிடமும் சொல்ல வேண்டாம் வளர்ந்து இறைபணியே செய்யட்டும்.

இறங்கினாள் தனக்காகன வழியில் பல குழிகளைக்கடந்தாள் பசி பட்டினி படுக்ககூட இடமில்லை சொந்தமோ..... உறவோ....... இல்லை சொல்லிக்கொள்ளவும் யாரும்....... இல்லை பெண்கள் விடுதியில் சமையல் காறியாய் பல பல வேலைகள் மத்தியில் பயின்றால். பலவகையாக...... துன்பங்கள் துயரங்கள் பந்தாடின வெந்து நொந்து வேதனை கடந்தாள் பட்டப்படிப்பையும் நிறைவு செய்தாள் இன்று பிரபலமான வங்கியொன்றில் பிரதம முகாமையாளராக பணிபுரிகிறாள்… வாகனம் மாடிவீடு என எல்லா வசதியும் வாய்க்க சொந்த பந்தம் எல்லாமே சூழ்ந்தது அவளுக்கு திருமணமும் நடந்தது. இவளுக்கு மறுமணம்தான் வாழ்வில் நல்லதொரு இடத்தினை அடைந்து சமூகத்தில் மதிப்பிற்குரிய இடத்தில் இருக்கிறாள் எல்லாமே உள்ளது ஆனால் அவளது உள்ளத்தில் மட்டும் உயர்தரம் எழுதும் தனது மகனை மறைந்து இருந்து பார்க்கும் பாக்கியம் பற்றி எரியும் தீயில் மலரை வீசுவது போல… மலர் எப்படி கறுப்புமலரானாலோ இப்போது கருகிய கறுப்பு மலர்…அவளைக்கான ஆவலாய் பலர்…

வை-கஜேந்திரன்
"மறுபிறப்பு" சிறுகதை தொகுப்பில் இருந்து.

கறுப்பு மலர்........ Reviewed by Author on September 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.