அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கீரி கடற்கரையில் தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும் வாரத்தினை-படங்கள்

மன்னார் கீரி கடற்கரையில் இன்று 18-09-2018 காலை 7-30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.C.J.மோகன்ராஸ் தலைமையில் தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும் வாரத்தினை முன்னிட்டு மாபெரும் சிரமதானம் நடைபெற்றது.
இவ் சிரமதான நிகழ்வில்
  •  பொலிசார்
  • இராணுவத்தினர்
  • கடற்படை அதிகாரிகள் 
  • Navy
  • Mepa
  •  கடற்கரை வளம் பேணல் திணைக்களம்
கச்சேரி பிரதேச செயலகம் பிரதேச சபை நகர சபை அரச அதிகாரிகள் பொது அமைப்புக்கள் பொதுமக்கள் என 300ற்கும் அதிகமானோர் கலந்து சிரமதானப்பணியில்  ஈடுபட்டனர்.

எமது கடல்வளத்தினை நாம் தான் பாதுகாக்க வேண்டும் கடற்கரையில் கழிவுகளை கொட்டாமலும்  சேரும் கழிவுகளை அகற்றுதலும் தான் தூய்மையான கடற்கரை வளம் பேணும் செயற்பாடாக அமையும் கலந்து கொண்டவர்களின் கருத்து.

மாவட்ட அரசாங்க அதிபர் திரு.C.J.மோகன்ராஸ் அவர்கள் தனது கருத்துப்பகிர்வில் எமது வளங்கள் பாதுகாக்கப்படவேண்டுமானால் நாம் முதலில் தயாராக இருக்கவேண்டும்  கடற்கரை தானே என்று கழிவுகளை கொட்டுதல் அங்கு தேங்கி இருக்கும் பொலித்தீன் ஏனைய கழிவுகளை துப்பரவு செய்யாமல் இருப்பதால் நோய் தொற்றுக்கள் பரவக்கூடும் அசுத்தமானதாக இருந்தால் அதிகமான பிரச்சினைகள் தோன்றும் எனவே சுத்தமானமுறையில் எமது இயற்கை வளங்களைப்பேணிப்பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வும் அழகான சூழலும் உருவாகும் அதற்கு அந்த ஒரு வாரம் மட்டுமல்ல ஒவ்வொரு வாரமும் செயற்பட வேண்டும்.
கீரி கடற்கரையில் தொடர்ந்து தாழ்வுபாடு கடற்கரை தலைமன்னார் கடற்கரை வங்காலை கடற்கரை  பள்ளிமுனை கடற்கரை  பேசாலை அரிப்பு முசலி  அத்தனை கடற்கரையிலும்  சிரமதானப்பணிகள் நடைபெறவுள்ளது.

 தொகுப்பு வை.கஜேந்திரன்










































மன்னார் கீரி கடற்கரையில் தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும் வாரத்தினை-படங்கள் Reviewed by Author on September 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.