அண்மைய செய்திகள்

recent
-

மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் லண்டன்.....எத்தினையாவது


பிரித்தானியாவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக Edinburgh நகரமும், பாதுகாப்பற்ற நகரமாக Birmingham-ம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பொதுமக்கள் வாழ்வதற்கேற்ற பாதுகாப்பான நகரங்கள் பற்றி ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது.

அதில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஏற்ற நகரமாக Edinburgh நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் 90 சதவிகிதம் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் எனவும், வெறும் 16 சதவிகிதம் மட்டுமே குற்றச்செயல்கள் நடைபெறுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, Bristol, Brighton & Hove, Southampton மற்றும் Cambridge என முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது.
அதேசமயம் Birmingham பகுதியில் வாழும் மக்களில் 42 சதவிகிதத்தினர் நாளுக்கு நாள் ஆபத்தில் உள்ளதை போல் உணர்வதாக தெரிவித்துள்ளனர். அதிலும் அவர்கள் தங்களுடைய சொந்த வீட்டில் இருந்தாலும் கூட பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பாதுகாப்பற்ற நகரங்களில் Leicester, Manchester, London மற்றும் Sheffield என முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் லண்டன்.....எத்தினையாவது Reviewed by Author on September 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.