அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு பிரதேசத்தில் வறட்சியினால்........


மடு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட பாலன்பிட்டி தொடங்கி கீரிசுட்டான இரண இலுப்பக்குளம் உட்பட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் கடும் வறட்சியினால் பாதிப்பு அடைந்துள்ளது.

பெரிய குளங்கள் சிறு குளங்கள் வற்றி விட்ட காரணத்தால்
கிணறுகளிலும் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும் பாவனைக்கும்  தண்ணீர் வசதிகள் இல்லை அத்துடன் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளுக்கும் பழ வகை மரம் செடிகள் போன்றவற்றிற்கும் நீர் கிடையாதுடையா இதனால் ஓவ்வொரு வீட்டுக் காணிகளில் காணப்படும்  மரங்கள் செடிகள் நெருப்பில் எரிக்கப்பட்டவை காட்சியளிக்கின்றது.

கடந்த வருடங்களில் பூச்செடிகள் பழ வகைகள் மரங்களுடன் பசுமையாகவும்  அழகாகவும் காணப்பட்டதால் மடு பிரதேச செயலரிடம் சிறந்த வீட்டுக் காணிக ளாக பரிசு பெற்ற வீட்டுக்காணிகளே வறட்சியால் இவ்வாறு கலையிழந்து பாலையாக காணப்படுகிறது என்று ஏக்கத்துடன் கூறுகின்றனர்  அதிக சனத்தொகைகளை வீட்டுக்கு வீடு அதிக தூரங்களையும் கொண்டிருப்பதால் நீர் தாங்கிகள் மூலம் தருவதைவிட குழாய் கிணற்று வசதிகளை செய்து தந்தால் குடி நீருடன் எமது வாழ்வாதாரம் மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மடுபிரதேச கிராமங்களில் நிலவும் வறட்சி  மற்றும் நிவாரணம் தொடர்பாக மடு பிரதேச செயலாளர் ஜெயகரன் அவர்களிடம் கேட்டபோது வறட்சியால்  மன்னார் மாவட்டத்தில் மடுபிரதேச மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சிக்கான நிவாரணம் மிக விரைவில் மக்களுக்கு வழங்கப்படும் என்று மடு பிரதேச செயலாளர் ஜெயகரன் அவர்கள் தெரிவித்தார்.




மன்னார் மடு பிரதேசத்தில் வறட்சியினால்........ Reviewed by Author on September 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.