அண்மைய செய்திகள்

recent
-

நாம் இழந்த உரிமைகளை பெறவேண்டுமானால் அது தரமான கல்வியால் தான் சாத்தியமாகும்-S-விமலேஸ்வரன்.Eng

நம்மைக்காண வருகின்றார் கல்விச்சேவையாளர் சமூகஆர்வலர் பொறியலாளர் விரிவுரையாளர் S.விமலேஸ்வரன்Msc Eng(Lon),Bsc Eng(Hons) அவர்களின் அகத்திலிருந்து…..
நாம் இழந்த உரிமைகளை பெறவேண்டுமானால் அது தரமான கல்வியால் தான் சாத்தியமாகும். இதுவே சத்தியம்

தங்களைப்பற்றி---
எனது சொந்த இடம் விடத்தல்தீவு தற்போது பெரியகமம் மன்னாரில் எனது தந்தை சுவக்கீன் சூசைப்பிள்ளை(மணி மாஸ்ரர்)ஓய்வு நிலை உதவிகல்விப்பணிப்பாளர்-மடு  தாய் சூ.கிறிரீன் சகுந்தலா குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கல்விக்கான சேவையிலும் சமூக சேவையிலும் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றேன். எனது சேவைக்கு என்னுடன் இணைந்து செயலாற்றும் எனது மனைவி கலாவித்தகர் வி.மரியகொறற்றி கலைப்பீடம்-(ART-DANCE )யாழ் பல்கலைக்கழகம் -யாழ் திருமறைக்கலாமன்றம் முன்னாள் ஆசிரியர்.பங்களிப்புடன்.
தாங்கள் கல்விக்காலம் பற்றி---
எனது ஆரம்பக்கல்வி பல இடம்பெயர்வுகளால் சீரழிந்துபோனதால் புலமைப்பரீட்சையில் சித்தியடையவில்லை அதன் பின்பு O/L-A/L எடுத்திருந்தேன் அப்போது அப்பா என்னை பார்க்க வருகின்றார். நான் பயத்தில் உறைந்து போயுள்ளேன் என்னை பார்க்க வந்த அப்பா எனதுகையில் அழகான நீலக்கலர் மணிக்கூடு ஒன்றை கட்டிவிட்டார் நான் எதிர்பார்க்கவே இல்லை மகழ்ச்சிதான் அன்று பாடசாலையில ஆசிரியர் றோகினி அவர்கள் ஒவ்வொருவரிடமும் பெறுபேறுகளை கேட்கின்றார் 74D.C-6D.2C என்றதும் நான் எனது 6C-2Sபெறுபேறை சொல்ல பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை பின்பு இரண்டாம் தவணையில் எனது திறமையைக்கண்டு ஊக்கப்படுத்தினார் அத்தோடு இன்னும் பல ஆசிரியர்களின் சேவை இன்று பொறியலாளராகவுள்ளேன் மனதில் இன்னும் அந்தநாள் நினைவுகள்.

கல்விக்கான சேவையினை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பற்றி---
நான் விடத்தல்தீவு பாடசாலையில் கல்வி கற்றேன் அப்போது 10-15 இடப்பெயர்வுகள் மடுப்பகுதியில் இருந்தோம் நான் தரம் 05ல் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன் அந்தசமயம் எனது தந்தை அதிபராக கடமையாற்றிக்கொண்டு இருந்தார்.

மீண்டும் நான் விடத்தல்தீவு வந்ததும் கோவிலில் அறிவித்தல் புலமைப்பரீட்சை நடைபெறப்போகின்றது. என்றார்கள் நான் புலமைப்பரீட்சை தாளில் சுட்எண்ணுக்குப்பதிலாக எனது பெயரைத்தான் எழுதினே என்றால் அந்தளவுக்கு தயார் நிலையில் இல்லை அதே நேரம் பயிற்சியும் இல்லை அந்த நினைவுகள் தான் இப்போது செய்வதற்கு முதல் எண்ணம் எனலாம். பின்பு இரண்டாவதாக எனது தந்தை மடு உதவிக்கல்விப்பணிப்பாளராக இருந்ததும் எமது இழந்த உரிமைகளை கல்வியால்  மட்டும் தான் வெல்ல முடியும் என்ற திடமான நம்பிக்கை தான்.

எவ்வாற மாணவர்களுக்கான கல்விச்சேவையாற்றுகின்றீர்கள்…
புலமைப்பரீட்சை மற்றும் க.பொ.சாதாரண தரம் பரீடசை வினாத்தாள்கள்
புலமைப்பரீட்சை அறிவு விருத்திக்கானதுடன் க.பொ.சாதாரண தரம் பரீடசை என்பது மாணவர்களின் வாழ்வின் அடுத்தகட்டத்திற்கான படியே அதனால் மிகவும் அவசியமான பரீட்சையாகும் அதிலும் கணிதம் பரீட்சை தான் மாணவர்களின் பிரதான பாடமாக உள்ளது அதனால் கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் வினாத்தாள்கள் வழங்கி மாணவர்களின் பரீட்சைக்கு தயார்படுத்தல் செயற்பாடு ஆகும்.
ஆரம்ப காலங்களில் கள்ளியடி-விடத்தல்தீவு-இலுப்பைக்கடவை போன்ற மாணவர்களுக்கான பரீட்சைகளை நடாத்தி வினாத்தாள்களை திருத்தும் வேலைகளில் எனது பல்கலைக்கழக மாணவர்களுடன் ஈடுபட்டேன். பின்பு Work Out Sheat அடிச்சு செயற்பாடுகளை பார்வையிட்டோம்
அத்துடன் பரீட்சை வினாத்தாள் அடங்கிய 7 புத்தகங்கள் வெளியிட்டேன்
MCQ-1980-2016 வினாவாக வெளியட்ட தொகுப்பு பிரியோசனமானதாக அமைந்தது.

தங்களால் மாணவர்களுக்கான செயற்பாடுகள் விரிவாக்கம் பற்றி---
2002ல் இருந்து கல்விக்கான சேவைகள் தொடங்கினாலும் கடந்த 08 வருடங்களாகவே முழுமையான சேவைகள் தொடர்கின்றது.
  • இந்தியாவில் இருந்து வருகை தந்த குடும்பங்களின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ட்ரியுசன் கட்டணங்கள் வழங்குதல்.
  • என்னுடன் தொடர்பு கொண்டு உதவிகோரும் மாணவர்களுக்கு பாடசாலைப்பொருட்கள் வழங்குதல்.
  • 2வருடங்களாக சத்திகரிப்பு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப்பொருட்கள் வழங்குதல்.
  • என்னுடன் பணியாற்றும் சகபணியாளர்களது பிள்ளைகளுக்கு பாடசாலைப்பொருட்கள் வழங்குதல்.
  • சில பாடசாலைகளின் சிறிய தேவைகளை பூர்த்தி செய்தல் (போக்குவரத்து செலவு-பரிப்பொதிகள்)
  • பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கு இதுவரை 110*1000ரூபா வீதம் வங்கிகணக்கு ஆரம்பித்து வைத்துள்ளேன்.அதை தற்போது புலமைப்பரீட்சையில் சிறப்பு சித்தி பெறும் மாணவர்களுக்கு 5000 ரூபா வீதம் 3 பேருக்கு போட்டுள்னே.தொடர்ந்து செயற்படவுள்ளேன்.
  • சில கலைச்செயற்பாடுகளிலும் கலைஞர்களுக்கும் உதவியுள்ளேன் 
  • மன்னார் மாவட்டம் தவிர்ந்து ஏனைய சில மாவட்டங்களின் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களுக்கான செயற்பாடுகள்
மன்னார் மக்களின் செயற்பாட்டுக்கு என இயங்கும் அமைப்புகள் பற்றி---
மன்னார்ல பல அமைப்புகள் உள்ள ஆனாலும் நான் உள்ள அமைப்பான மன்னார் மக்கள் நலன் பேணும் அமைப்பு-MMPA இவ்வமைப்பானது மன்னாரின் முன்னேற்றம் தொடர்பான பணிகளை
  • பாலங்கள் தொடர்பான செயற்பாடுகள்
  • தகவல் அறியும் சட்டம் தொடர்பான
  • வைத்தியசாலை செயற்பாடுகள்
  • அபிவிருத்திப்பணிகள் தொடர்பான செயற்பாடுகள் இன்னும் பல விடையங்களை அவதானித்து வருகின்றோம்.இவ்வமைப்பில் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி உன்னதமாய் செயற்படுகின்றது எனலாம்;.
கல்விக்கான சேவையாக கடந்தகால வினாத்தாள்களை அச்சிட்டு இலவசமாக வழங்குவதற்கு சுமார் 5இலட்சத்திற்கு மேலாக செலவு வருகின்றதே….தனியாளக செயற்படுத்தக்கூடியதாக உள்ளதா…
நான் மேற்படிப்பிற்காக இலண்டனில் இருக்கும் போது இரண்டு
Elephant Soda மற்றும் Redna விற்பனை பிரதிநிதியாக இருந்து செயல்பட்டேன் அதில் இருந்து வரும் வருமானத்தினை வைத்துக்கொண்டு செயலாற்றி வந்தேன் என்னிடம் பணியாற்றிய சிலரின் முறைகேடான செயற்பாடினால் இரண்டு விற்பனைகளையும் நிறுத்திவிட்டேன்.
தற்போது விரிவுரையாளர்-டிசைன்-Property Devalaper இம்மூன்றில் இருந்து வரும் வருமானத்தில் இருந்து எதாவது ஒன்றினைகல்விக்கான செயற்பாட்டிற்காக செலவிட்டு வருகின்றேன்.

இவ்வாறான கல்விச்செயற்பாட்டின் மூலம் நிங்கள் அடைந்த பலன்---
கடைசியாக வெளிவந்த இரண்டு நூல்களில் தான் எனது பெயரை பலரின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டேன். கடந்தகாலங்களில் 2005-2006ம் ஆண்டு காலப்பகுதிகளில் மன்னார் மாவட்ட மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை பார்க்கும் போது குறைவான நிலையில்தான் இருந்தது யுத்த சூழ்நிலை காரணமாக இருக்கலாம் 2009ம்ஆண்டும் குறைவாகத்தான் இருந்தது.ஆனால் 2017ம்ஆண்டு மன்னார் 1ம் நிலையினையும் வவுனியா 2ம் நிலையும் பருத்திதுறை 3ம் நிலையும் பெற்றிருக்கின்றது. என்றால் கல்வியில் மாணவர்களின் எழுச்சி மகிழ்ச்சிக்கு உரியது தானே அந்த சந்தோசம் தான் இந்த எழுச்சியில் எனது பங்களிப்பும் இருக்கின்றது என்ற சந்தோசம் தான் வேறொன்றும் இல்லை.

அத்தோடு இப்பயிற்சி நூலானது 500ரூபாவிற்கு விற்பனை செய்கின்றார்கள் எல்லோராலும் விலை கொடுத்து வாங்கமுடியாத நிலையில் இருப்பார்கள் இலவசமாக நான் வழங்குவதால் எல்லோர் கையிலும் ஒரே நூல் இருக்கும் ஆசிரியர் 50 பக்கத்தினை எடுங்கள் என்றால் எல்லோரும் எடுப்பார்கள் கரும்பலகையில் எழுத வேண்டி அவசியம் இல்லை நேரம் மிச்சம் அதனால் அதிகமாகும் கற்கும் நேரம் மாணவர்கள் பயனடைவார்கள் அல்லவா அவர்கள் பாடசாலையை விட்டு விலகும் போது திருப்பிக்கொடுப்பார்கள் எப்படியும் 60% வீதம் தான் கிடைக்கும் மிகுதி 40%வீதம் குறைவாக இருக்கும் நான் மீண்டும் இலவசமாக புத்தகங்களை வழங்கிக்கொண்டே இருப்பேன்.

முதல் வேலையனுபவம் பற்றி---
இனிமையானது தான்  நான் 4வருடங்கள் பொறியியல் முடித்து முதலாவது வேலை பொறுப்பேற்க நான் தெரிவு செய்த இடம் எனது மாவட்டம் தான் ஆனாலும் எனக்கு கொழும்பில் இருந்த
CUP-CEB-ICE-வேலை கிடைத்தும் நான் எனது மாவட்டத்திற்கு தான் வந்தேன் அப்போது யுத்த சூழல் தான் பாலியாறு-கணேசபுரம்-சாந்திபுரம் போன்ற பகுதிகளில் பணியாற்றினேன்.
சாந்திபுரத்தில் தண்ணீர் Water Pump Line தோட்டக்காடு-சாந்திபுரம் வரை 2200M பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஐப்பான் நிறுவனத்தின் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்த போது Infrastructure-மேற்பார்வை அதிகாரி இந்த வேலைத்திடடம் முழுமையடையாது(RDA-பிரச்சினைகள் மக்களின் குழப்பம்) போல செய்யும் வரை செய்யுங்கள் முடியவில்லையானால் இடை நிறுத்துங்கள் என்று சொல்லி ஐப்பான் சென்றுவிடடார்.

 நான் 06 மாதங்களாக சாந்திபுரம் தரவான்கோட்டை மக்களின் பெரும் உதவியோடு பெக்கோ வசதி இல்லாத நேரம் 1பெக்கோவினை வைத்துக்கொண்டு அலுவலகம் செல்லாமல் வெற்றிகரமாக லைனை Line செய்து Water Pump Line Pressuer பரிசோதனை செய்துகொண்டு நிற்கின்றேன். அந்த Infrastructure-அதிகாரி வருகின்றார் வந்தவர் வேலை 99 வீதம் நிறைவடைந்து இருப்பதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தவர் என்னை கட்டித்தழுவி வாழ்த்துக்கள் கூடினார் அத்தோடு என்ன வேண்டும் கேள் என்றார் நான் சும்மா MSC செய்ய வேண்டும் என்றேன். ம்ம்ம் சரி பார்க்கலாம் என்று சொல்லி சென்றார். 03நாட்களுக்கு பின்பு அலுவலகம் போறன் அங்கு மேசையில் எனது MSCக்கான புலமைப்பரிசில் கடிதம் இருக்கின்றது. மகிழ்ச்சிதான் ஆனால் போவதற்கு பணம் வேண்டமே அவசரஅவசரமாக வேலை பார்த்தேன் தற்போது உள்ள காணியின் பாதியினை சுமார் 7இலட்சம் ரூபாவிற்கு விற்று இலண்டன் பயணமானேன் அங்கும் சில துன்பங்கள் கடந்து 02வருடங்கள் பொறியியல் கல்வியினை முழுமையாக நிறைவு செய்து 05வருடங்கள் பொறியியலாலராக டொக்லாண்ட்-கிளைஸ்ரன் கல்லூரி போன்ற பல இடங்களில் கடமையாற்றி பின் 2013 ஓகஸ்ற் மன்னார் வந்தேன.

வாழ்வின் துன்பங்களை கடக்கும் போது மனநிலை பற்றி---
நான் பல துன்பங்களை இன்னல்களை கடந்திருக்கின்றேன் அப்போது பல சந்தர்பங்களில் இறைவன் எனக்கு உணர்த்தியுள்ளார்
  • கடிண உழைப்பும் 
  • உண்மையும் 
  • நேர்மையும் வேலை செய்தால் அதற்குரிய பலனும் கிடைக்கும் என்பது நிதர்சனமாய் உணர்கின்றேன்.

தற்கால இளைஞர் யுவதிகளுக்கு தங்களின் கருத்து---
தற்கால இளைஞர் யுவதிககள் தங்களின் கல்வியினை துறையினை சரியான முறையில் தெரிவு செய்ய தவறி விடுகின்றார்கள் அதனால் இலக்கினை அடைவது கடிணமாகவுள்ளது தான் பிரச்சினை பொறியலாளர் எனும் போது 1-2-3-4-5 இடங்களை பெறுகின்றவர்கள்தான் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புகிடைக்கும் மற்றவர்கள் மற்ற துறைகளை தெரிவு செய்யலாம்.
E2-NTD-NDES-HNDE-E-TEC Open University-Technical College    தமது விருப்பமான துறையினை தெரிவு செய்து கற்று தகுதியான T.O தொழில்நுட்ப உத்தியோகத்தராக வரலாம் வரவேண்டும். மன்னாரில் T.O தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சரியான குறைவு வெளிமாவட்டத்தில் உள்ளவர்கள் இங்கு உள்ளார்கள்.
 பொறியியல் துறை குப்பையாகவுள்ளது பொறியியலாளராக நான் வெட்கப்படகின்றேன். இலங்கையில் அனேகமான துறைகளில் பொறியியல் தான் உள்ளது இது ஒரு நல்ல தொழில்
  • வைத்தியர்கள் என்றால் நோயாளர்கள் தேவை
  • லோயர் என்றால் பிரச்சினைகள் தேவை
  • ஆனால் பொறியியல் தொழில் நாட்டின் வளர்ச்சியில் முதுகெழும்பு எனலாம்.இப்போது பலர் பொறியியல் துறையினை தொழிலாக மட்டும் எண்ணி தவறாக கொண்டு செல்கின்றார்கள். மாணவர்கள் உயர்தரம் கற்கும் போதே சரியான துறையை தெரிவு செய்யவேண்டும். கலைகள் அழிவதற்கு காரணமும் இதுதான் எந்த நேரமும் கல்வி என்று பரீட்சைக்காக கற்கிறார்களே தவிர வாழ்க்ககைக்கா கல்வியாக இருந்தால் அங்கு கலையும் இதரசெயற்பாடுகளும் இருக்கும் அதுதான் முழுமையான கல்வியும் வளரச்சியும்.
மறக்க முடியாத விடையங்கள் என்றால் ---
பல இருந்தாலும் சில கல்வியோடு செயலாற்றியவிடையங்கள்
முள்ளியவளையில் பயிற்சி ஆசிரியராக சேவை செய்தமை
மடுவில் ஒரு முறை கருத்தரங்கு ஒன்று நடத்தினோம் அதிலே கணிதம் பாடத்திற்கான ஆசிரியர்கள் 70வீதமானவர்களும் சித்திரப்பாட நியமனத்தில் கணிதபாடத்தினை கற்றுக்கொடுப்பதற்கான பெரும் முயற்சி அதுவும் தெரியாத விடையப்பரப்பினை தெரிந்து கொண்டு அதை மாணவர்களுக்கு வழங்கவேண்டிய ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவேண்டிய தருணம் பிழையான செயற்பாடாக இருந்தாலும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்கத்தான் வேண்டும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கி நின்று கல்விச்செயற்பாட்டினை செய்கின்றார்கள் என்றால் அதுவும் அர்ப்பணிப்புதான்.

மன்னார் மாவட்டத்தில் கல்வி கற்றல் நிலை பற்றி---
மன்னார் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் யுவதிகள் வேலை இல்லை என்று சொல்லுகின்றார்களே வேலைக்கு தகுதியாக மேலதிகமான கற்கைகளை நிறைவு செய்துள்ளார்களா.... என்றால் இல்லை தற்போது மன்னாரில் Open University-Technical College -English Center  பல இருக்கின்து அதுவும் 9ம்  தரம் O/L-A/Lஎன ஒவ்வொருபிரிவினருக்கு ஏற்றவகையில் நிறைய துறைகளாக கற்கைநெறிகள் உள்ளது அங்கு சென்று கற்று தகுதியாக வந்தால் வேலை நிச்சயம் கிடைக்கும் இருக்கும் வளங்களை நன்கு பயன்படுத்தவேண்டும். முன்னேற வேண்டும்.

 கல்விச்சேவை தொடர்ச்சியாக மேற்கொள்ள எதிர்கால திட்டம் பற்றி-

 உள்ளது தற்போது பகுதிநேர விரிவுரையாளராகவும் டிசைனர் மற்றும் Property Develaper வேலைகள் செய்து கொண்டு வந்தாலும் நான் எனது தரத்தினை மேலும் உயர்த்துவதற்கான Charter Engineear பரீட்சைக்கு தயாராகிக்கொண்டு இருக்கின்றேன்.Charter Engineear Association  பதிவு பெறவேண்டும் அப்படி பதிவு பெற்றால்தான் சுயமாக பெரிய செயற்திட்டங்களை மாடிவீடுகளை கட்டுவதற்கான அங்கீகாரம் கிடைக்கும் அதன் பின் வருமானம் அதிகரிக்கும் எனது கல்விச்சேவை தொடரும் நான் உயிருடன் இருக்கும் வரை அதன் பின்பு அது இறைவன் கையில்தான் உள்ளது.

இதுவரை தங்களின் பாதையில்….
கடந்த 08 வருடங்களாகவே முழுமையான சேவைகள் தொடர்கின்றது. யாருடனும் இணைந்து செயற்படவில்லை கல்விக்கான சேவவையாக தொடர்கின்றேன் இதுவரை மன்னார் மாவட்டத்தின் 60பாடசாலைகளுக்கு மேல் சென்று உதவிகளை வழங்கியுள்ளேன். அத்துடன் கணிதம்-விஞ்ஞானம்-ஆங்கிலம்-நூல் அடங்கலாக 35 நூல்கள் வெளியிட்டு இலவசவமாக வழங்கியுள்ளேன் 36 நூலும் வெளிவரவுள்ளது.

தங்களின் பணியும் பாராட்டும் கௌரவிப்பும் பற்றி---
  • இயக்குநர்-மன்னாரின் மறுமலர்ச்சி-2020 அமைப்பு (இயக்குநர் குழுவில்-ஒருவர்)
  • அகில இலங்கை நல்லுறவு அமைப்பின் 20பேர் கொண்ட குழுவில் இருக்கின்றேன். மன்னார் 11மாவட்டமாகவுள்ளது(வவுனியா-திருகோணமலை-மன்னார்)மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் அமைப்பாகும்.
  • எனது Victory With God(VC-God) அமைப்பின் மூலம்  கல்விச்சேவை தொட்ர்கின்றது
  • எனது சேவைகளை கௌரவப்படுத்தி பல பாடசாலைகள் அமைப்புக்கள் விருந்தினராக அழைத்து பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கினர்

மன்னாரின் வளர்சியில் பெரும்பங்காற்றும் நியூமன்னார் இணையம் பற்றி---
மன்னாரில் நடக்கின்ற ஒவ்வொரு விடையங்களையும் உடனுக்குடன் அறியக்கூடியதாக இருக்கின்றது. என்றால் அது நியூமன்னார் இணையத்தின் மட்டுமேதான் ஒருவரைப்பற்றியோ... ஒரு அமைப்பினை பற்றியோ... முழுமையான தகவல் திரட்டினை காணமுடியும் இதைப்பார்ப்பவர்கள் தாமும் இவ்வாறு பல விடையங்கயை செய்ய வேண்டும். என்ற ஆவலை ஏற்படுத்தி ஊக்குவிக்கும் செயல் உண்மையிலே பாராட்டுக்குரியது.மன்னாரின் எழுச்சியில் நியூமன்னாருக்கும் பெரும்பங்குண்டு எனலாம்.
 தொடரட்டும் சேவை வாழ்த்துக்கள்

சந்திப்பு-வை.கஜேந்திரன்-
























 

நாம் இழந்த உரிமைகளை பெறவேண்டுமானால் அது தரமான கல்வியால் தான் சாத்தியமாகும்-S-விமலேஸ்வரன்.Eng Reviewed by Author on September 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.