அண்மைய செய்திகள்

recent
-

பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையும் வறண்டு--படங்கள்

வெப்பத்தினாலும் குளங்கள் நீர் நிலைகள் வற்றி வறண்டு போயுள்ளது மக்களுக்கும் விவசாயிகளும் பெரும் துன்பத்தில் உள்ளனர்.
இந்த நேரத்தில் தான் மன்னாரின் அடையாளமும் பக்திநிறைந்த பாடல் பெற்ற புனித தலமான திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையும் வறண்டு போய் உள்ளது  மிகவும் கவலைக்குரிய விடையமாகும்.
காரணம் நாடெங்கிலும் இருந்து வருகை தரும் பக்தர்களின் நேர்த்திக்கடன்கள் வணக்கச்செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளது.
அத்தோடு அழகிழந்தும் காணப்படுகின்றது.  முதலை இருக்கிறது என்று இருந்தபோதும் இப்போதும் மிகுந்த மனவேதனையாக உள்ளதாக பக்தர்களும் மக்களும் தெரிவித்தனர்.
எனவே ஆலய பரிபாலன சபை மேற்குறித்த பிரச்சினைகளுக்கு  எந்த வகையில் தீர்வினை முன்வைக்கலாம் என்பதினை ஆராய வேண்டும். காரணம் இத்தலமானது எல்லா மக்களாலும் எல்லா இடத்தில் இருந்தும் வருகை தரும் பக்தர்கள் தரிசனம் பெறும் தலமாகும் ஆகையால்
  • முதலைப்பிரச்சினை-துப்பரவு செய்தல்
    பாதுகாப்பான வேலியமைத்தல்
  • பாலாவி  நீர் இன்மை பிரச்சினை
இதர பிரச்சினைகள் அனைத்தினையும்  இக்காலப்பகுதியில் செய்தல் நலம்.

அத்துடன் பிரச்சினையினை தீர்ப்பதற்கு மழைகாலங்களில் நீரை சேமித்து பயன் படுத்தும் முறையினையும் ஏனைய தகுந்த வழிகளை காணவேண்டும்.
எம்மிடம் இருக்கின்ற வளங்களையாவது அதன்  மகிமை குறையாமல் பேணுவது எமது ஒருவரினதும் கடமையல்லவா.......

எனக்கென்ன என்று இருந்தால்......
எதுவும் இல்லாமல் போய்விடும்.....

சிந்திப்போம் செயல்படுவோம்.........


























பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையும் வறண்டு--படங்கள் Reviewed by Author on September 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.