அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு கடிதம் எழுதிய கிம் ஜாங் உன்!


உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது.

அதில், அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் பிறகு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் டிரம்பிற்கு கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், கிம் ஜாங் அன் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

மிகவும் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய நேர்மறையான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவணம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு கடிதம் எழுதிய கிம் ஜாங் உன்! Reviewed by Author on September 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.