அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் மூத்த கலைஞர்கள் இருவருக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிப்பு....

 மன்னாரின் மூத்த கலைஞர்கள் இருவருக்கு  முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிப்பு
  •  வாத்தியக்கலை வித்துவான் கிறிஸ்தோகு சந்தியோகு
  •  சிரேஷ்ட ஊடகவியலாளர் லோறன்ஸ் கொன்சால் வாஸ் கூஞ்ஞ
மன்னார் பிராந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் லோறன்ஸ் கொன்சால் வாஸ் கூஞ்ஞ ஞாயிற்றுக் கிழமை (30.09.2018) நடைபெற்ற வௌ;வேறான நிகழ்விகளில் இரு விருதுகளைப் பெற்றுள்ளார்.

வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் கலை இலக்கிய பண்பாட்டுத்துறைக்கு பங்காற்றி வரும் மூத்த கலைஞர்களுக்கான முதலமைச்சர் விருது வழங்கும் வைபவம் ஞாயிற்றுக் கிழமை (30.09.2018) முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இவ்வாண்டுக்கான முதலமைச்சர் விருதுக்காக மன்னார் மாவட்டத்திலிருந்து   இருவர் தெரிவு செய்யப்பட்டத்தில் இதில் ஊடக்கலைத்துறைக்காகன விருதை சிரேஷ்ட ஊடகவியலாளர் வாஸ் கூஞ்ஞ முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் என்பவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

தலைமன்னாரை பிறப்பிடமாகவும் பேசாலையை வதிவிடமாகவும் கொண்டு விளங்கும் மன்னார் பிராந்திய ஊடகவியலாளரான வாஸ் கூஞ்ஞ 1967 தொடக்கம் ஊடகத்துறையில் ஈடுபட்டு வரும் கலைஞர் ஆவார்.
நடுநிலையான செய்தியாளராகத் தொழிற்பட்டு வருமிவர் 1967 தொடக்கம் 1975 வரை சத்தியவேத பாதுகாலன் பத்திரிகை செய்தியாளராகவும் 1976 ஆம் ஆண்டு முதல் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் லிமிட்டட் நிறுவனத்திலிருந்து வெளிவரும் வீரகேசரி, மித்திரன் மற்றும் இந் நிறுவனங்களின் ஏனைய பத்திரிகைகளிலும் இன்றுவரை மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தலைமன்னார் நிருபர் அல்லது வாஸ் கூஞ்ஞ என்ற பெயரில் செய்திகளை வழங்கி வருகின்றார்.

இதனைவிட சக்தி எவ்.எம்.நியூஸ் வெஸ்ற் ஆகியவற்றிக்கு 2003 இல் இருந்து இன்றுவரை செய்தியாளராக கடமையாற்றி வருகின்றார்.

இவரது ஊடகப்பணியைப்பாராட்டி 1988 மன்னார் ஆயுள்வேத வைத்திய சபையும், மன்னார் பிரதேச செயலகம் 2005 இல் ஊடகவியலாளர் கௌரவத்தையும், 2016 இல் மன்னார் கம்பன் விழாவில் ஊடகமணி விருதையும், 2015 இல் தேசிய ஊடகசங்கம் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் கௌரவத்தையும், 2016 இல் சக்தி எவ்.எம். நீண்ட கால சேவையாளன் விருதையும், 2017 இல் தமிழ் தேசிய விழாவில் தலைசிறந்த ஊடகவியலாளர் விருதையும் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது 55 வருட ஊடகப்பணியைப் பாராட்டி வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2018 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் விருதையும் ஞாயிற்றுக் கிழமை (30.09.2018) வழங்கி கௌரவித்துள்ளது.

இத்துடன் 'கல்வியே கருத்தனம்', 'ஒழுக்கம் உயிரிலும் மேலானது', சேமிப்பு ஆக்கம் தரும்' என்ற விருதுவாக்கை  தலைமன்னார் பியரில் 1980 ஆம் ஆண்டு முதல் முன்னிருத்தி சேவையாற்றி வரும் இவரை இதே தினம் தலைமன்னார் பியர் வாலிபர் விளையாட்டு கழகத்தினால் ஞாயிற்றுக் கிழமை (30.09.2018) தலைமன்னார் பியரில் நடைபெற்ற பெருவிழாவில் இவ் பிரதேச மக்களினால் போற்றப்படும் நீங்காத சேவையாளனாகிய கொன்சால் வாஸ் கூஞ்ஞ அவர்களின் அர்ப்பணிப்புடனான சேவைப் பணியைப் பாராட்டி வாழ்நாள் சமூக சேவையாளர் என்ற விருதையும் வழங்கி கௌரவித்தனர்.

இவ் விழாவில் பிரதம அதிதியாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்  புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்  காதர் மஸ்தான் மற்றும் மன்னார்  பிரதேச  செயலாளர் பரமதாஸ்இ மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியான் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

  • வாத்தியக்கலை வித்துவான் கிறிஸ்தோகு சந்தியோகு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் கலை இலக்கிய பண்பாட்டுத்துறைக்கு பங்காற்றி வரும் மூத்த கலைஞர்களுக்கான இவ்வாண்டுக்கான முதலமைச்சர் விருதுக்காக மன்னார் மாவட்டத்திலிருந்து   இருவர் தெரிவு செய்யப்பட்டத்தில் இதில் மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த கலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு வாத்தியக் கலைக்கான விருதை முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் என்பவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

கலாபூஷணம் கிறிஸ்தோகு சந்தியோகு இவர் தலைசிறந்த மிருதங்கம் வாத்தியக் கலைஞர் ஆவார். சவீன கன்னி நாடகம், சந்தியோகுமையோர் நாடகம், எரம்பதோடு நாடகம், நொண்டி நாடகம், இம்மானுவேல் நாடகம், காத்தவராயன் கூத்து, அரிச்சந்திரன் மயான காண்டம், கர்ணன் போர், வள்ளி திருமணம் அல்லி அருச்சுனா, சத்தியவான் சாவித்திரி, கோவலன் கண்ணகி, அந்தோனியார் நாடகம் என ஏராளமான கூத்துகளுக்கும் நாடகங்களுக்கும் மிருதங்க வாத்தியம் இசைத்து பெரும் புகழ் பெற்றுள்ளார்.

1964 இல் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ.ஏ.அழகர்கோன் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கோடை இடி என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவரது கலைப்பணியைப் பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் கலாச்சார அலுவல்கள்எ திணைக்களம் கலாபூஷணம் விருதை வழங்கியவை குறிப்பிடத்தக்கது.

இவரது 70 வருட கலைப்பணியை பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2018 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் விருதையும் ஞாயிற்றுக் கிழமை (30.09.2018) வழங்கி கௌரவித்துள்ளது.

தொகுப்பு- வை -கஜேந்திரன்-







மன்னாரின் மூத்த கலைஞர்கள் இருவருக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிப்பு.... Reviewed by Author on October 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.