அண்மைய செய்திகள்

recent
-

மரத்தை வெட்ட றிஸாட் பதியுதீனின் நிதியை பெற்ற EPRLF கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்-(படம்)


மன்னார்   தோட்ட வெளி யோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள மரம் ஒன்றை வெட்டுவதற்காக குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.அந்தோனிப்பிள்ளை   அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளரிடம்   நிகழ்வு ஒன்றில் வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(15) காலை இடம் பெற்றுள்ளது.

தோட்ட வெளி யோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள பாடசாலை வீதியில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காணப்பட்ட  மரத்தினை வெட்டுவதற்கான செலவினை மன்னார் பிரதேச சபையின் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி போட்டியிட்டு போனஸ் ஆசனத்தை பெற்றுக் கொண்ட   உறுப்பினர் எஸ். அந்தோனிப்பிள்ளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான முன்னாள் மாகாண சபை உறுப்பினர்   றிப்கான் பதியுதீனிடம் கோரியிருந்தார்.

குறித்த உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக இன்று திங்கட்கிழமை (15) காலை தோட்ட வெளி யோசப்வாஸ் நகர் கிராமத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயலாளர் றிப்கான் பதியுதீன் மரம் வெட்டுவதற்கான செலவாக 25ஆயிரம்(25.000) ரூபாவை குறித்த கிராமத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் எஸ். அந்தோனிப்பிள்ளையிடம் கையளித்துள்ளார்.குறித்த சம்பவம் கிராமத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

-குறித்த சம்பவம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேசிடம் வினவிய போது,,,

 ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியும், வி.ஆனந்த சங்கரி தலைமையிலாக தமிழர் விடுதலைக்கூட்டணியும் இணைந்து கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டுள்ளது.

-இதன் போது மன்னார் பிரதேச சபை தேர்தலில் எஸ்.அந்தோனிப்பிள்ளை என்பவர் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார்.

எனினும் அவர் தேர்தலில் தோழ்வியடைந்த நிலையில் அவருக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டது.

எனினும் அவருக்கான ஆசனம் கட்சியின் நிபந்தனைக்க அமைவாக ஒரு சில வருடங்களே வழங்கப்பட்டது.

ஆனால் அவருக்கான போனஸ் ஆசனம் வழங்கப்பட்டதில் இருந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றார்.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

-அவருக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

-எனினும் அவருக்கு எதிராக நடவடிக்கைள் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

-கட்சியின் கொள்கைகளை மீறி செயற்பட்டு வரும் மன்னார் பிரதேச சபையின் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் போனஸ் ஆசன உறுப்பினர் எஸ்.அந்தோனிப்பிள்ளை வெகு விரைவில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் மேலும் தெரிவித்தார்.




மரத்தை வெட்ட றிஸாட் பதியுதீனின் நிதியை பெற்ற EPRLF கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்-(படம்) Reviewed by Author on October 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.