அண்மைய செய்திகள்

recent
-

சிறுவர் சிறப்பு----நிலா…..


ஆசிரியர்கள்……தெய்வத்திற்கும் மேலானவர்கள் அவர்களின் சேவை அளப்பரியது மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள்…. மாதா பிதாவிற்குப்பின்  குரு என மூன்றாவது இடத்தில் வைத்து பார்க்கும். அளவிற்கும் குருவிற்கு பிறகுதான் தெய்வங்களே என்றால் காரணம். தாய் தந்தையர்களைவிட அதிக நேரம் இருப்பது ஆசிரியர்களுடன் தான் அதனால் கடமையுணர்வுடனும் கருணையுள்ளத்துடனும் கற்பிக்க வேண்டும் அன்றைய ஆசிரியர்களின் கல்வி கற்றல் முறை வேறு…. இன்றைய கல்வி கற்றல் முறை வேறு….

அன்றைய ஆசிரியர்கள் மாணவர்களை தங்களின் பிள்ளைகள் போலவே கவனித்து கற்பித்தார்கள் கற்பிக்கும் போது அன்றைய பாடத்துடன் தொடர்புடைய கதையொன்றை சொல்லி அக்கதைகளில் மாணவர்களின் பாடப்பரப்போடு இணைத்து அவர்கள் வாழ்வில் எவ்வாறு ஒழுக்கம் பண்பு பரிவு பாசம் கீழ்படிவு சமூகப்பண்பாடு என்பனவற்றையெல்லாம் எடுத்துச்சொல்வதாகவே அமைந்திருந்தது. அருமையானது ஆரோக்கியமானது.

பாட்டி…தாத்தா…கதை சொல்லி உறவு முறைகள் வளர்ந்தது உண்மையான அன்பும் பண்பும் மிளிர்ந்தது ஒளிர்ந்தது இன்றைய நிலையில்…..நவினமயமான உலகில் எல்லாமே மாறிப்போயுள்ளது நவீனத்தின் பிடியில் நசுங்கிப்போயுள்ளான் மனிதன் அடிமையாக…எல்லாவற்றையும் விட கற்றல் கற்பித்தல் நிலையும் மிகவும் மோசமான பாதையில் பாதாளத்தினை நோக்கி…

அன்று தாத்தா பாட்டி ஆசிரியர்கள் கற்றலோடு கதை சொல்லி கல்வியையும் கலாச்சாரத்தினையும் பாரம்பரியத்தினையும் நிலை நாட்டினார்கள் இன்று அதுவே கணணியிலும் கைப்பேசியிலும் ஊஞ்சலாடுகிறது. கணணி-காட்டூன் பொம்மைகள் காமொடிப்பாடல்கள் கணணி வீடியோக்கேம் விளையாட்டுக்கள் சமூகவலைத்தளங்களில் நிலைத்துப்போயுள்ளனர்.

அம்மாணவர்களை நோக்கினால் கண்பார்வை குறைந்தும்…ஓடியாடி விளையாடாமல் உடற்பயிற்சி இல்லாமல் சுறுசுறுப்பின்மையும் தான் தனியே கணணியோடு பொன்னான பொழுதையெல்லாம் கழித்து தாய் தந்தை சகோதரன் நண்பன் உறவினர்களின் அன்பற்ற நிலையில் விரக்தி ஏற்பட்டு தனிமைப்பட்டு தவறான வழியில் தடம்புரளுகின்றது வளமான எம் மாணவசமூதாயம் வளமற்ற மண்ணைப்போல….

வளமான மண்ணில் வளரும் மாடிக்கட்டிடங்களினால் வாய்ச்சோற்றுக்கே கையேந்தும் நிலை வரப்போகின்றது அது போலவே தற்போதைய மாணவமாணவிகளின் நிலை….. மாணவர்களின் மனங்களில் குடிகொண்டிருக்கும் நவீனத்தினை அப்புறப்படுத்த வேண்டும் முதலில் அதற்கு இயல்பாகவே மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றலாலும் கற்பிப்பதாலும் பெற்றோர்களும் உறுதுணையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் உறுதியான உண்மையான உன்னதமான மாணவசமூதாயத்தினை உருவாக்க முடியும். இந்த மாணவ சமூதாயத்தால் தான் நாளை நல்லதொரு உலகம் விடியும் என தனது நீண்ட உரையை முடித்த கல்லூரி முதல்வர்…ஆம்…இன்று எம் கல்லூரிக்கு புதிதாக நியமனம் பெற்று வந்திருக்கும் ஆசிரியர்கள் மூவர்களை அறிமுகம் செய்து வைத்தார்….

ஆசிரியர் நிலா…தமிழ் பாடத்திற்கும்
ஆசிரியர் கலா…கணித பாடத்திற்கும்
ஆசிரியர் லைலா…ஆங்கில பாடத்திற்கும் அறிமுகப்படலம் நிறைவுற்றது பாடவேளை ஆரம்பமானது…..

தரம் 5டி வகுப்பு எப்போதுமே சத்தமாகத்தான் இருக்கும் மீன்சந்தையும் தோற்றுப்போய்விடும். காலையில் வரும்போது தான் மாணவர்களாக இருப்பார்கள் இரண்டாம் பாடவேளையோடு சரி இரைச்சலுக்கும் குறைவிராது அடி…பிடி…சண்டையென தொடரும் சேட்டைகள் ஆசிரியர்கள் அலுத்துப்போய் விடுவார்கள் வேண்டவே வேண்டாம் இந்த வகுப்பு இதுகள் பிள்ளைகளா…பிசாசுகள்…வானரக்கூட்டங்கள் இதுகள் படிக்க வாரல்ல இந்த முறை புலமைப்பரீட்சை ஒன்றும் தேறாது இது 5டி வகுப்பு பிள்ளைகளுக்கான ஆசிரியர்களின் சாபமாகவே இருந்தது…

இதற்கு முன்பெல்லாம் இவர்கள் இப்படியில்லை பாடசாலைக்கே உதாரணமாக இருந்த இந்த 5டி வகுப்புத்தான் ரவுடி வகுப்பாய் காட்சியளிக்கிறது எப்ப வகுப்பாசிரியர் மாலா மாற்றலாகிப்போனாரோ அன்றிலிருந்து ….!!!! அதன் எத்தனையோ ஆசிரியர்கள்…??? வகுப்பிற்கே போக மறுப்பார்கள் போனாலும் நெருப்பில் நிற்பது போலத்தான் என புதிதாக வந்த நிலா ஆசிரியரிடம் புலம்பித்தள்ளினார் கல்லூரி முதல்வர்….
5டி வகுப்பிற்கு வகுப்பாசிரியராக உம்மால் போக முடியுமா….. தமிழும் சமயமும் கற்றுக்கொடுக்கவும் வேண்டும் உம்மால் முடியுமா….!!! ம்ம்ம் நிலாவின் முகத்தில் புன்னகை கல்லூரி முதல்வர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது இத்தனை நாளாய் வாட்டியெடுத்த பிரச்சினைக்கு தீர்வு பாலைவனத்தில் பெய்த மழை போல முதல்வரின் மனம் குளிர்ந்தது…
கல்லூரி முதல்வர் நிலா ஆசிரியரோடு 5டிக்குள் நுழைந்தார் திடீரென பெரிய புயலுடன் கூடிய மழை பெய்து ஓய்ந்தது போல பெரும் அமைதி நிலவியது. இவர் தான் உங்கள் வகுப்பாசிரியர் நல்ல பிள்ளைகளாக குழப்படி இல்லாமல் படிக்க வேண்டும் இல்லை என்றால் அடி தான் விழும் என்று அணுகுண்டைப்போட்டு சென்றார்.

கல்லூரி முதல்வர்…
எனது பெயர் நிலா…
உங்கள் பெயரைச்சொல்லுங்கள் …..
அமைதி தொடர்ந்தது யாருமே எதுவும் பேசவில்லை ஒரு மாணவன் எழுந்து டீச்சர் நீங்கள் கதை சொல்லுவிங்களா…..கண்டபடி அடிப்பீங்களா…. வானரம் என்று திட்டுவிங்களா…என்று கேட்டுவிட்டு குனிந்து நின்றான் மணி
நிலா டீச்சர் சிரித்தார் வாய்விட்டுச்சிரித்hர் நான் உங்களை அடிக்கவும் மாட்டேன் பேசவும் மாட்டேன் நன்றாய் நல்ல நல்ல கதைகள் செல்வேன்…என்றதும் எல்லா மாணவர்களின் முகத்திலும் பற்கள் அப்படிச்சிரித்தனர் சிரிப்பொலியில் பாடசாலையே அதிர்ந்தது
ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் பெயரை செல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார்கள் மாணவர்களின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தினை அதிகரிக்க விரும்பிய நிலா டீச்சர்….
உங்களுக்கு நிலவைப்பிடிக்குமா….

பிடிக்கும் டீச்சர்…. பிடிக்கும் டீச்சர்…. பிடிக்கும் டீச்சர்….
நிலா டீச்சர்…..ஏன் பிடிக்கும்?
அது அழகானது என்றான் மணி
பாட்டி பாக்கு குத்திக்கொண்டு இருக்கிறா….ரவி
வெள்ளை நிறமானது….ரோசி
வட்டமானது வடிவானது….ராணி
இந்த நிலவைக்காட்டித்தான் அம்மா எனக்கு உணவு ஊட்டினார்
அந்த நிலா உள்ளது  ஆனால் என் அம்மா இல்லை எனக்கு நிலாவை பிடிக்காது அழுது கொண்டே சொன்னாள் சீதா
சிறிது நேரம் மௌனம் நிலவியது…
மாணவர்கள் ஒவ்வொருவரும்  நிலவைப்போல இருக்க வேண்டும்.

ஏன் டீச்சர்…சீதா
நிலவானது….
உயரத்தில் உள்ளது….
யாவருக்கும் பொதுவானது….
அழகாய் எல்லோரையும் கவர்ந்துள்ளது….
தூய்மையாய் பால்போன்ற வெண்மையானது…
எப்படி டீச்சர் உயரத்தில் இருப்பது….?
நிலவு போல நாம் வாழ முடியுமா…..?
உங்களால் முடியும் நீங்கள் ஒவ்வொருவரும் கற்கும் கல்வியை திறம்படக்கற்றால் அதன் படியே ஒழுக்கமுள்ளவர்களாக பெரியோர் இடத்தில் மரியாதையுடையவர்களாக அன்புள்ளம் கொண்ட பிள்ளைகளாக வாழ்ந்தால் ஒவ்வொருவரும் அந்த நிலவைப்போல் வாழலாம்….
அன்பில் யாவருக்கும் அழகாய்…
நல்ல பழக்கவழக்கத்தில் தூய்மையான மனமுடையவர்களாய்…எப்போதும் பிறர் நலத்தில் பொதுவாகவும் கல்வியினால் உயரத்தில் இருந்தால் நீங்கள் ஒவ்வொருவரும் நிலவு தான்…
டீச்சர் நீங்களும் ஒரு நிலவு தான் என்றான் …மணி எல்லா மாணவர்களும் சிரிக்கின்றார்கள்….

ஏன்…. மணி…டீச்சர் நிலா….
அழகாய் இருக்கின்றீர்கள்….
யாவருக்கும் பொதுவாக இருக்கின்றீர்கள்
கல்வியில் உயரத்தில் இருக்கின்றீர்கள் அப்படியானால் நீங்களும் நிலவு தானே டீச்சர் நிலா நானும் உங்களைப்போல சிறுமியாய் இருக்கும் போது மாலா டீச்சர் சொன்ன கதைதான் நீங்களும் நிலவுகளாய் மாற வாருங்கள் இப்போதே படிப்போம்….
 -வை-கஜேந்திரன்-   
     (மறுபிறப்பு சிறுகதை தொகுப்பிலிருந்து-2017)






சிறுவர் சிறப்பு----நிலா….. Reviewed by Author on October 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.