அண்மைய செய்திகள்

recent
-

ஐந்து ஆண்டுகளின் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விபரம்! -

வடமாகாண சபையின் ஐந்து வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிச் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்
வடமாகாணசபை தனது ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் 133 அமர்வுகளை இதுவரை நடாத்தியுள்ளது. 134வது அமர்வு இறுதி அமர்வாகும். இதுவரை நடைபெற்ற 133 அமர்வுகளில் 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவற்றுள் தமிழர் மீதான இனப்படுகொலை மற்றும் தாக்குதல்கள் தொடர்பான ஆறு முக்கியமான பிரேரணைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களுமாக 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதேபோல் குறைநிரப்பு நியதிச்சட்டங்களும் உள்ளடங்கலாக இதுவரை 29 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் பாலி ஆற்றிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு நீரை கொண்டுவரும் தீர்மானம் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்துள்ளது.
அதனை நான் கொண்டுவந்தேன் என்பதற்கும் அப்பால் அதன் ஊடாக மக்கள் அடையவுள்ள நன்மைகளின் அடிப்படையில் அந்த தீர்மானம் மிக முக்கியமானது.


மேலும் அந்த தீர்மானம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த திட்டம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிறைவேற்றப்படும் என்றார்.
ஐந்து ஆண்டுகளின் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விபரம்! - Reviewed by Author on October 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.